சனி, 2 மே, 2020

பிரபாகரனின் மறுபக்கத்தை கிளற தேவையில்லையா? மே மாத வசூல் ஆரம்பம்

ஆலஞ்சியார் : ஈழம் மட்டுமே தங்களின் பிழைப்பாக கொண்டு திரியும் திருமுருகன் காந்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கரனை விமர்சிப்பதை பார்பனீய மனநிலை என்கிறார் ..
முதலில் இவர்களுக்கு ஈழம் பிரபாகரன் தவிர வேறெதும்,தெரியாது .. பத்தாண்டுகளுக்கு முன்பே தோற்றுவிட்ட ஈழ போராட்டத்தோடு நூற்றாண்டுகளாய் எம்மை அழுத்தி நிற்கும் பார்பனத்தோடு முடிச்சு போடுகிறார் .. மக்களின் ஆதரவு பெற்ற ஜனநாயக பாதையில் பயணிக்கும் திமுக உறுப்பினரை விமர்சிக்க கூட ஒரு தகுதி வேண்டும் அது ஈழ பிழைப்புவாதிகளுக்கெல்லாம் இல்லை ..
பிரபாகரனின் மறுபக்கத்தை கிளற தேவையில்லை ஆனால் என்பதாண்டுகள் இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்த மிகச்சிறந்த ஜனநாயகவாதி .. மாபெரும் கட்சியின் தலைவர் இந்தியா கண்ட ஆகசிறந்த ஆளுமை கலைஞரை சில சில்லுவண்டிகள் அரைகுறைகள் வாய்க்குவந்ததை பேசி திரிந்தபோதெல்லாம் இந்த மயிராண்டிகள் எங்கு போனார்கள் .. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லை #கலைஞர் ஆனால் வரம்புமீறி திரும்ப திரும்ப ஒரே பொய்மூட்டைகளால் கேலியும் கிண்டலும் செய்தபோதெல்லாம் வராத கோபம் ..
பிரபாகரனை விமர்சித்தால் வருகிறது

அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டுமென்கிறார் .. பிரபா

இன்று தமிழகம் கண்ட மாபெரும் வளர்ச்சி அடித்தளம் கலைஞரின் கடும்உழைப்பில், சிந்தையில், தொலைநோக்கு பார்வையில் வந்ததென அறியாதவர் யாருமில்லை ஆனாலும் அவரை விமர்சிப்போம் என்பது தான் பார்பனீய நிலைபாடு .. இன்றும் பாசிசவாதிகள் திமுகவை மட்டுமே நோக்கி குரைத்துக்கொண்டிருக்கிறார்களே என்ன காரணம் ..அந்தளவு பார்பனீயத்திற்கு தண்ணிகாட்டியவர் கலைஞரை தவிர வேறு யாரும் இல்லை ..
..
மே மாதம் வந்தாலே வசூல் ஞாபகம் வரும் ஈழ போராட்ட வரலாற்றை இவர்களை விட கொச்சைபடுத்தியவர்கள் வேறுயாரும் இல்லை .. ஆமைகதைகளும் அரசிகடத்தலும் தான் பிரபாகரனின் பிரதான பணியாக இருந்ததாக பேசி திரிந்தபோதெல்லாம் சிறுமைப்படாத பிரபாகரனின் செல்வாக்கு திமுக எம்பி விமர்சிப்பத்தவுடன் வந்துவிடுமா என்ன..
இலங்கை போர் முடிந்து பெண் போராளிகள் உட்பட தடவுகாரர்களாய் இருந்த போது நீதிமன்றத்தில் வழக்காட வழியில்லாமல் வலிகளோடு இருந்தவர்களுக்கு சில சிங்கள வழக்குரைஞர்கள் வாதிட்டு வெளிகொணர்ந்ததெல்லாம் எழுத தொடங்கினால் இந்த பிழைப்புவாதிகளின் பாடு திண்டாட்டமாகிவிடும்.. பிரபாகரனை கலைஞர் கடைசி வரை குறைவாக மதிப்பிடவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போல ஒரு இடத்தும் பிரபாகரனும் கலைஞரை குறைத்து பேசியோ விமர்ச்க்கவோ இல்லை .. சில தவறான வழிகாட்டுததால் வீழ்ந்தது ஈழப் போராட்டம்..
சிலர் இதைவிட்டால் பிழைக்க,
அரசியல் செய்ய வேறுவழியில்லை என்பதால்
ஈழ அரசியல் பார்வையை ஆரம்பம் தொட்டே திமுக எதிர்பார்க்கி காலத்தை ஓட்டினார்கள் .. ஆனால் இனியும் அது இங்கே நடக்காது மக்கள் ஈழ போராட்ட வீழ்ச்சியை அறிந்திருக்கிறார்கள்
..
தமிழகத்தில் எத்தனை போராட்டங்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கெல்லாம் காரணமான மத்திய மாநில அரசுகளை எல்லாம் இவர்கள் மறந்து கண்டிப்பதில்லை..ஆனால் முடிந்துவிட்ட இனி ஈழம் கிட்டாதென்ற உண்மையை உணர்ந்து ..
பெருங்கனவாய் போனதென்று அறிந்தும் பிரபாகரனைப்போல ஒருவர் ஈழ போராட்டத்தை இனி முன்னெடுக்க முடியாது நீர்த்து போய்விட்ட போராட்ட வரலாற்றை வைத்து இனியும் தமிழகத்தை அரசியல் செய்ய நினைப்பதையும் .. திராவிடத்தை எதிர்ப்பதற்கு ஈழத்தை கையிலெடுத்து பார்பனீயத்திற்கு அடிவருடுவதையும் இனியும் கண்டும்காணாததுபோல் இருக்கமுடியாது ..
பெரியாரை பேரறிஞரை பேரருளாளனை குற்றம் சுமத்துகிறவன் எவனையும் விடுவதாயில்லை .. அரசியல் செய்ய வேறெதாவது காரணிகளை கொண்டுவாருங்கள்..
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக