செவ்வாய், 19 மே, 2020

பிரபா உருப்படியாக ஒன்றும் செய்யமாட்டார் ... மறைந்த வேங்கை செல்லகிளி கூறியது

லெப்டின் கேர்னல் செல்லகிளி
Left செல்லகிளி
லெப்டினென்ட் கேர்னல் செல்லக்கிளி அன்று பிரபாகரன் பற்றி: :
 " உவனோட ஒண்டும் உருப்படியாக செய்ய முடியாது . இவன் ஒரு நாளைக்கு என்னையும் தட்டுவான் ."
என்று பிரபாவை பற்றி செல்லக்கிளி தனக்கு நெருங்கியவர்களிடம் கூறுவது தெரியும்.
செல்லக்கிளி எதற்கு பயப்படாத ஒரு காட்டு யானை போன்றவர் நேர்மையானவர் மிகவும் நல்லவர்.
அவர் பிரபாவை வெறுத்து இதொன்றும் சரிவாராது என்ற முடிவில் இந்தியாவுக்கு சென்று விட்டார் . அப்போது பிரபா டெலோவில் குட்டிமணி தங்கத்துரையோடு சேர்ந்து இயங்கி அவர்களை போலீசிடம் காட்டி கொடுத்துவிட்டு பணத்தோடும் ஆயுதங்களோடும் அடுத்து என்ன செய்வது என்று முழி முழி என்று முழித்து கொண்டிருந்த காலம் .
அவருக்கு ஏதாவது ஒரு பெரிய தாக்குதல் செய்யவேண்டும் அதன் மூலம் பல மாங்காய்களை விழுத்த முடியும் என்ற கருத்தில் இருந்தார். அப்போது சிறையில் இருந்த குட்டிமணி தங்கத்துரை ஜெகன் உட்பட சுமார் ஐம்பது போராளிகளை கொழும்பில் இருந்த சிங்கள தமிழ் அண்டர் கிரவுண்ட் குழுக்களோடு ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தனர் ஸ்ரீ சபாரதினம் குழுவினர்.
அவர்கள் இதை ஏனைய இயக்கங்களுக்கு ரகசியமாக கூறி அதுவரை ஒரு தாக்குதல்களும் செய்யவேண்டாம் என்று கேட்டு கொண்டார்.ஏனெனில் தாக்குதல்கள் நடந்தால் கொழும்பில் ராணுவ போலீஸ் கெடுபிடிகள் முடுக்கி விடப்பட்டு விடும் .அதன் காரணமாக இந்த திட்டம் நிறைவேறாமல் போய்விடும்.
இதுதான் பிரபாகரனின் வழக்கமான நஞ்சு மூளைக்கு தீனி போட்டது . ஒரே கல்லில் பல மாங்காய்கள்.
கொழும்பில் நிச்சயம் கலவரம் வரும் . அப்படி வந்தால் குட்டிமணி தங்கத்துரை போன்றோர் எந்த காலத்திலும் வெளியே வரமுடியாது என்ற கணக்கை போட்டார்.
இதற்கு அவருக்கு சரியான ஆளாக தெரிந்தது செல்லக்கிளி மட்டுமே.
ஏனெனில் செல்லக்கிளி அளவுக்கு வல்லமையான போராளி அப்போது ஒருவரும்ம் இல்லை என்பதை இங்கே அழுத்தம் திருத்தமாக கூறுகிறேன். அவர் அப்படி ஒரு மாபெரும் ஆளுமை.
பிரபகரன் தனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால் குழைந்து கவர்ச்சிகரமாக பேசி நடிப்பதில் மிக பெரிய திறமைசாலி.
இந்த வித்தையால் அவர் ஏமாற்றிய மனிதர்களின் தொகை மிக மிக அதிகம்.
செல்லகிளி பிரபாவை பற்றி நன்றாக தெரிந்திருந்தும் ஏமாந்தார்.
அந்த ஊர் செல்லக்கிளியின் அயலூர்தான்.
முழுக்க முழுக்க அந்த திட்டத்தை நீதான் தலைமை ஏற்று செய்யவேண்டும் என்று கூறி முழு பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார் பிரபாகரன்.
அவர் அதை திறமையாக நிறைவேற்றினார்.
இதனால் குட்டிமணி தங்கத்துரையின் விடுதலை திட்டம் தடைப்படுமா என்பது செல்லகிளிக்கு தெரிந்ததா இல்லையா என்பது தெரியவில்லை.>
டெலிபோன் போன்ற வசதிகள் இல்லாத காலம் . செல்லகிளியும் நீண்ட காலம் இந்தியாவில் ஒழித்து இருந்து விட்டு யாரோடும் தொடர்பு இல்லாமல் இருந்தார் . எனவே அவருக்கு இது தெரியாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
அல்லது அதையும் மீறி பிரபாவின் மூளை சலவையில் ஈடுபட்டார என்பதுவும் தெரியவில்லை.
திருநெல்வேலி தாக்குதல் வெற்றிகரமாக நிறவெறிய கையோடு ஆங்கில மாபியா படங்களில் வருவது போல .. அப்படியே தனது கைத்துப்பாக்கியை செல்லக்கிளியை நோக்கி சுட்டார் . சற்றும் எதிர்பாராத செல்லகிளி என்ற உண்மையான மாவீரனை நயவஞ்சகமாக சுட்டு கொன்றார் பிரபா என்ற கோடரி காம்பு.
Sivaji Elayathamby : 13 இறப்பிற்கு காரணம். தங்கத்துரை ஜெகன் குட்டி மரணதண்டனையை இரத்து செய்ததால் நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர்கள் சிறை உடைப்பில் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக. ஒபரோய்தேவன் நிராவியடியில் வைத்து சுடப்பட்டதும் இதே பின்னணியில் தான் என்று அறிய முடிந்தது -கலாநிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக