வியாழன், 28 மே, 2020

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் இறப்பு .. கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலிதினத்தந்தி : கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு! 
சென்னையில் பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். சென்னை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் தலைமை செவிலியர் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார். இதன்பின்னர் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். எனினும், இதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக