வியாழன், 7 மே, 2020

பாலிமார் செய்தியாளரின் காரில் மதுப்புட்டிகள் கடத்தல் .

பிடிபட்ட பாட்டில்கள
மதுகடத்தல் கார்
Shankar A : பாலிமர் டிவி ட்.ஆர்பியில் இன்றும் நம்பர் ஒன் என்பது உங்களில் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.
பாலிமர் டிவியில் விவாதங்கள் கிடையாது. தனித்த பேட்டிகள் கிடையாது. ஆனால் தொடர்ச்சியாக நியூஸ் புல்லட்டின்கள் மட்டும் ஓடும்.
இதற்கு முக்கிய காரணம், தினத்தந்தியின் காட்சி வடிவை பாலிமர் கையில் எடுத்ததுதான். ஒரு கள்ளக்காதல் மேட்டரை, 3 நிமிடத்துக்கு விரிவாக க்ராபிக்ஸோடு போடுவார்கள். நம் பலரின் மனதில் இது போன்ற செய்திகளை கேட்க இருக்கும் அதீத ஆர்வத்தின் காரணமாக, நம்மை அறியாமல் இந்த செய்திகளை பார்ப்போம். இது போல, க்ரைம் செய்திகளை க்ராபிக்ஸோடு விரித்து விரித்து செய்தி போடுவதில் பாலிமருக்கு நிகரில்லை. இதன் காரணமாக இன்றும் அதுதான் நம்பர் ஒன்.
எப்போதுமே அரசுக்கு ஆதரவாகத்தான் பாலிமர் செயல்படும். ஓரிரு
ஆண்டுகளுக்கு முன்னால் மோடி சென்னை ராஜ்பவன் வந்து பத்திரிக்கை எடிட்டர்களை சந்திக்க இருந்தபோது, பாலிமர் நியூஸின் உரிமையாளர் கல்யாணசுந்தரம், தன் மனைவியோடு முதல் ஆளாக ராஜ்பவன் சென்றார்.
அதன் பிறகு, பாலிமர் இந்து மத ஊடகமாகவே செயல்பட்டு வந்தது.
இதே அடிப்படையில்தான், கொரொனா பரவலை பாலிமர் செய்தியாக்கியது. ஈரோட்டில் தப்லீக் மாநாட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு தொற்று என்று தகவல் வந்தபோது, பாலிமர் “தப்லிக் டு பப்லிக்” என்று செய்தி வெளியிட்டது. மற்றொரு செய்தித் தொகுப்பின் தலைப்பு, “ஈரோட்டுக்கு கொரொனாவை கொண்டு வந்த 4 பேர்”. தொடர்ந்து, தமிழகத்துக்கு கொரொனா வந்ததே தப்லீக் அமைப்பினரால்தான் என்று செய்தி வெளியிட்டு வந்தது.
இந்த நிறுவனம் அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து இருப்பதன் விளைவாக, இந்நிறுவனத்தில் பணியாற்று சிலருக்கு நோய் தொற்று ஏற்பட்ட பின்னரும், இந்நிறுவன அலுவலகம் தூய்மைப்படுத்தும் பணிக்காக முழுவதும் மூடப்படவில்லை. ஆனால் சத்தியம் டிவி முழுமையாக மூடப்பட்டது.
இப்போது இதை எழுதுவதற்கான காரணம், இன்று பாலிமர் நியுஸ் செய்தியாளர், ப்ரியன், கேமராமேன் பாஸ்க்கர் ஆகியோர், சென்னைக்கு வெளியே மது பாட்டில்களை வாங்கி, பாலிமர் அலுவலக காரில் வருகையில், கிழக்கு கடற்கரை சாலையில், கானாத்தூர் அருகே காவல் துறையினரால் பிடிக்கப்பட்டனர்.
வழக்கு பதிவு செய்யாமல் விடுவிக்க அமைச்சர் வரை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று இதுவரை தகவல் இல்லை.
என்னுடைய எதிர்ப்பார்ப்பு. மது கடத்தி பிடிபட்ட பாலிமர் செய்தியாளர் மற்றும் கேமராமேன், பற்றி க்ராபிக்ஸோடு செய்தி போடுவார்களா என்பதே.
செய்வீர்களா.... நீங்கள் செய்வீர்களா !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக