சனி, 16 மே, 2020

கச்சதீவு .. கொடுத்தது இந்திரா ! ....கூடவே இருந்து துரோகம் செய்தது காமராஜர் .நெடுமாறன்!..

Sukumaran Periyaarism : திரு.குணசேகரா, இதை கொஞ்சம் படி. இனி யாராவது உங்க ஊடகத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு, "திமுக தான் கச்சத் தீவை இலங்கைக்கு தானாமா கொடுத்ததுனு சொன்னால், அவனை காரி துப்பி உண்மை நிலையை அவனுக்கு புரியும்படி சொல்லனும், சரியா! நீயும் அவனோடு சேர்ந்து நரி வேலை பார்க்கக் கூடாது.
வரலாறு முக்கியம்* கலைஞர் அவர்களை மட்டுமே குறை கூறி, பொய் பிரச்சாரம் செய்து இளைஞர்களின் மூளையை சலவை செய்யும் சீமான், காவிக் கூட்டங்கள் மற்றும் அடிமை அதிமுகவிடமும் கவனமாக இருங்கள். இவர்களின் நோக்கம் திமுக மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே. உணர்வீர் இளந்தலைமுறையினரே.....
 கட்ச தீவு 1974 - யார் யார் என்ன செய்தார்கள்?
 (கருணாநிதி, காமராஜர், நெடுமாறன், MGR , ஜெயலலிதா )
 கட்ச தீவு 1974 ல் இந்திரா காந்தியால் திடீரென ஒரு நாள் இலங்கைக்கு விட்டு கொடுக்க பட்டது. கையெழுத்திட்ட பிறகுதான் மீடியாவுக்கே தெரிய படுத்த பட்டது. இது இந்திரா காந்தியால் தன்னிச்சையாக எடுக்க பட்ட முடிவு. பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலையோ, மாநில அரசின் ஒப்புதலையோ பெறாமல் எடுக்க பட்ட முடிவு
 கலைஞர்  கருணாநிதி-; திமுக என்ன செய்தது?
 இதை எதிர்த்து திமுக தமிழகம் முழுவதும் போராடியது.
கலைஞர் கருணாநிதியினால் சட்ட பேரவையில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இந்திரா காந்தியிடம் கடும் கண்டனம் தெரிவிக்க பட்டது. அதன் விளைவாக சில திருத்தங்கள் செய்ய பட்டன.

காமராஜர் -
1974 ல் காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவர். இந்திரா காந்தியின் மிக நம்பிக்கையானவர். நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர். அப்போதுதான் இந்திரா காந்தி காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார்.
காமராஜரும் இந்திரா காந்தியை எதிர்த்து கட்ச தீவுக்காக போராட வில்லை. இவரைத்தான் கர்ம வீரர் என்று கூறி வருகிறோம்.
காங்கிரஸின் தேசிய தலைவர் காமராஜர் அன்று இந்திரா காந்தியை எதிர்த்து போராடியிருந்தால் பிரதமர் இந்திரா காந்தி நிச்சயம் தன் முடிவை மாற்றியிருப்பார்.
பழ .நெடுமாறன்-
அப்போது தமிழக காங்கிரசின் தலைவர் மற்றும் பொது செயலாளராக இருந்தவர் பழ நெடுமாறன்(1970 -1979). இவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. இவரைத்தான் இன காவலர் என்று கூறி வருகிறோம்
MGR
அப்போது அதிமுக தலைவரான MGR ம் இந்திரா காந்தியை எதிர்க்க வில்லை. கருணாநிதி கொண்டு வந்த சட்டசபை தீர்மானத்தை ஆதரிக்க வில்லை. அவர் அப்போது மஞ்சுளா, லதா ஆகியோரோடு இனைந்து 'நேற்று இன்று நாளை' மற்றும் 'இதயக்கனி' படங்களில் மும்முரமாக நடித்து கொண்டிருந்தார். இவரைத்தான் புரட்சி தலைவர் என்று சில தறுதலைகள் கூறி வருகின்றன.
ஜெயலலிதா
அப்போது ஜெயலலிதாவும் 'அவளுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் ஜெயசங்கருடன் மும்முரமாக நடித்து கொண்டு இருந்தார். இவரும் கச்ச தீவுக்கு குரல் கொடுக்க வில்லை. இவரைத்தான் தறுதலைகள் புரட்சி தலைவி என்று கூறி வருகின்றன.
இதில் துரோகம் செய்தது காமராஜரே. அவருடன் சேர்ந்து துரோகம் செய்தது பச்சோந்தி
பழ.நெடுமாறன்.
ஆனால் காமராஜர்
பெருமைக்குறியர் ??!!!!
எல்லாம்.... காலத்தின் கொடுமை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக