வியாழன், 21 மே, 2020

இன்று அமரர் ராஜீவ் காந்தி நினைவு நாள் ..


Uma Magi :இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட நாள்...
💥பயங்கரவாத எதிர்ப்பு நாள்
💥தமிழகத்திற்கு தீரா களங்கம் உண்டான நாள்
💥எவனோ செய்த பாதகத்திற்கு திமுக பழி சுமந்த நாள்.
💥அடைக்கலமும்,போர்ப்
பயிற்சியும் அளித்த நாட்டின் மேனாள் பிரதமரையே படுகொலை செய்து தங்கள் நன்றி கொன்ற குணத்தை புலிகள் உலகிற்கு படம் போட்டு காட்டிய நாள்.
💥சகோதர இயக்கங்களைக்கூட தீவிரவாத வழியில் தீர்த்துக்கட்டிவிட்டு ஏகபோக போராளிகளாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட இயக்கத்தினரின் தமிழக படுகொலை சம்பவத்தால் அவர்கள் மீது தமிழர்கள் வெறுப்பும், கோபமும் கொண்ட நாள்.
💥இந்தியப்பிரதமரை கொன்ற குற்றவாளியான ஒரு இயக்கத்தின் தலைவனை தனது ஆதர்ஷமாக வெளிப்படையாக கொடி பிடித்து கோஷம் போடுபவர்களை இன்று நாம் மெளனமாய் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிகிறது.
💥இனம்,மொழி, சாதி, மதம் என எதன் பெயரால் நடந்தாலும் தீவிரவாதத்தை ஆதரிக்க முடியாது.
💥என்ன காரணம் சொல்லியும் இந்தப்படுகொலையை நியாயப்படுத்த இயலாது.

💥அப்பாவி தமிழன், அப்பாவி சிங்களன், அப்பாவி பாலஸ்தீனியன், அப்பாவி இஸ்ரேலியன், அப்பாவி அமெரிக்கன் என எவர் பாதிக்கப்பட்டாலும் பாவம், தான்.
💥தன் மொழி பேசுபவன் என்பதற்காக குற்றவாளிகளை எல்லாம் ஆதரிக்கத் துவங்கினால் ....?
💥சொந்த அண்ணந்தம்பிகளுக்குள் வரப்புத் தகராறு ஏற்பட்டு கோர்ட்வரை செல்பவர்கள் தான் இலங்கைப் பிரச்சினைக்கு இங்கிருந்தே தீர்வு சொல்வர்.
💥இதை வைத்து காசு பார்க்க ஒரு கூட்டம் வேறு. இவர் அப்படி செய்திருக்கலாம் அவர் அப்படி செய்திருக்கலாம் என்பவர்கள் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்கள்.
💥ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது.
💥முதலில் உள் குழப்பங்களை அவர்கள் தீர்த்துக் கொள்ளட்டும். பிறகு குரல் கொடுக்கலாம் அதற்கு முதலில் இங்கு உன் குரல்வளை நெறிபடாமல் இருக்க வேண்டும் அதற்கான வழியைப்பார் என்கிற அளவு மக்களுக்கு தெளிவு ஏற்பட்டுவிட்டது.
💥ராஜீவ் கொலை மன்னிக்கவோ மறக்கவோ இயலாத குற்றம் .
💥தமிழனுக்கு தீரா வடு அது..
💥முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு நினைவஞ்சலிகள் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக