வெள்ளி, 8 மே, 2020

பெரியாரிய அமைப்புக்கள் திமுகவுக்கு எதிர் திசையில் செல்கிறதா? முக நூல் விவாதங்கள்

வளன்பிச்சைவளன்  : பெரியார் ணர்வாளர்கள் கூட்டமைப்புஏன்?
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு  இது வாக்கு அரசியல் சாராதது என்கிற பெயரில் திமுக நீங்கலாக என்று தொடங்கியது.
தி.மு.க எதிர் நிலை என்பதை மிக மெல்லியதாக திமுக நீங்கலாக என்பதில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு துவங்கியதா? இதற்கு வாக்கு அரசியலில் இல்லாதோர் அமைப்பு எனக் காரணம் சொல்லப் பட்டதும் இந்த அமைப்பை திமுக எதிர் நிலை வாக்காளர்களாக மாற்றும் பணியை நோக்கமாக கொண்டு துவங்கப் பட்டதா? என்ற ஐயம் அப்போதே பலருக்கும் எழுந்தது.
முதலில் இதில் தி க இல்லை பின்னர் பெரியார் அமைப்பில் தி க இல்லாமலா எனும் கேள்வியால் அவரை கூட்டமாக சென்று அழைத்தனர். இதில் சு ப வீ அவர்களையும் இணைக்காமல் இருந்தனர் அவர் திமுக ஆதரவாளர் என புறக்கணித்து இருந்தனர். இது குறித்தும் பரவலான விமர்சனம் எழவே இறுதியில் அவர் அழைக்கப் பட்டார். இவர்களது துவக்கமே திமுக எதிர்ப்பு என்பதும் அதை ஒருங்கிணை ப்பது என்பது தானோ என்ற ஐயம் வலுவடைந்தது சென்னையில் நடந்த திருவள்ளுவர் விழா குமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை சென்னையில் வள்ளுவர் கோட்டம், குரளோவியம் என வள்ளுவருக்கு புகழ் சேர்ந்த கலைஞர் படம் கூட இல்லாமல் வாக்கு அரசியல் சாராதவர்கள் என்ற போர்வையில் தந்திரமாக திமுக ஆதரவு நிலை பெரியாரிய உணர்வாளர் களிடம் வரக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனரா? என்ற ஐயம் வலுப்பெற்றது இது குறித்து தி.மு.க, வினர் ஆவேசமாக கேள்வி எழுப்ப அன்றே இப் பெரியாரிய உணர்வாளர்களில் சிலர் கலைஞர் புறக்கணிப்பை நியாயப்படுத்தும் வேலையை துவக்கி, திமுக எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

ஈழப்புலிகள் ஆதரவு என கலைஞர் மீது வன்மமான அவதூறுகள் பரப்பப்பட திமுக வினர் எதிர் வினை ஆற்றினர் ஆவேச பதிலடி மூலம் புனிதப் பட்டம் கட்டப்பட்ட புலி பிரபாகரன் ஒரு பாசிஸ்ட் சர்வாதிகாரி எதிர் கருத்தாளர் களை துப்பாக்கி முனையில் தீர்த்து கட்டியவர் தானே ஈழ மக்களின் ஏக பிரதிநிதி என காட்டிக் கொள்ள அறப் போர் தலைவர்கள் ஆயுதப் போர் தலைவர்கள் என அனைவரை யும் கொன்றொழித்தவர் என பிரபாகரனின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்ட பத்து ஆண்டுகளாக கலைஞரை ஈழம் தொடர்பாக வன்மமான அவதூறு பரப்பிய போது கைகட்டி வேடிக்கை பார்த் தவர்கள் பிரபாகரனை விமர்சித் தவுடன் பொங்கி எழுந்தனர். அதை வெளிக்காட்டாது இவ் விமர்சனம் திமுக ஓட்டுக்களை பாதிக்கும் என பூச்சாண்டி காட்டி திமுக வினர் வாயை அடைக்கும் முயற்சியில் இறங்கினர்.
அதற்காக அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்படவே. தி க தன் நிலையை தோழர் அருள் மொழி வாயிலாக வெளிப்படுத்தியது அவர் புலிகளின் தவறான செயல்பாடுகளை நியாயப் படுத்தாமலும் நம்மை உருவாக்கிய தலைவர்களை விமர்சிப்பதை கண்டித்தும் இது மேலும் தொடர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
தி வி க சார்பில் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை யும் அவரது இயக்க முகநூல் பொறுப்பாளருமான பரிமளராசன் அறிக்கையும் தேர்தல் கூட்டணி யைப் பொறுத்து ஆதரவு மாறு படும் என்ற அவரின் தொனி எளிதில் கடந்து போகக் கூடியது அல்ல
இன்று திருமுருகன் காந்தி எதிர் நிலை என்பதை தெளிவு படுத்தி உள்ளார் தி வி க தேர்தல் நேரத்தில் கூட்டணி பொறுத்து மாறும் என்பது அவர்கள் இதுவரை மேற் கொண்டது பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தி.மு.க எதிர்பிற்காக அவர்கள் உருவாக்கி உள்ளனரோ என்ற ஐயத்தை வலுப்படுத்து வதாகவே உன்ளது. சு ப வீ இதில் மற்றவர்களைப் பற்றி கணிக்காமல் அறிக்கை வெளியிடுகிறாரோ எனும் வினாவும் எழத்தான் செய்கிறது.
கொளத்தூர் மணி இந்தியாவே நினைத்து இருந்தாலும் போரை நிறுத்தி இருக்க முடியாது என்று கூறி இருந்தார் எனெனில் மேற்கத்திய நாடுகள் நடத்திய யுத்தம்.
இதற்கு விளக்கம் தரும் பரிமளராசன் இதன் பொருள் இந்தியா நினைக்க வில்லை என்பதே என்கிறார் ஏன் இந்த விளக்க உரை? அதன் அவசியம் என்ன? இதற்கு காரணம் இந்தியாவே தடுத்து நிறுத்த முடியாது என தெரிந்து இருந்தும் ஏன் இந்திய அரசை எதிர்த்து போராடினீர்கள் என்ற கேள்வி எழவே இந்த சமாளிப்பு பதில்
இப்பதில் ஒன்றை நினைவு கூறுகிறது அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடி யிடம் ஹைட்ரீக்ஸ்சி குளோயின் மருந்துகளை அனுப்பவில்லை எனில் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் அமெரிக்கா ரிட்ராலியேட் என்ற பதிலடி தருவோம் என்று எச்சரித்தார் அதற்கு உடனே பாஜக அரசு பணிந்தது எனினும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற கதையாய் அதை பாஜக ரிட்ராலியேட் என்றால் வேண்டு கோள் என்று சமாளித்து.
இதில் சங்கிகள் பாணி பின்பற்றப் படுவது தற்செயல் தானா?
உ பி யில் பாரதீய ஜனதா கையாண்ட யுக்தி எதிர்ப்பு ஓட்டுக்களை சிதறடிப்பது முஸ்லிம்கள் எளிதில் வெல்லும் 60 தொகுதிகள் இதில் பல முஸ்லீம் வேட்பாளர்களை களம் இறக்கும் சூழலலை அவர்களுக்குள் உருவாக்கி வெற்றி கண்டது வாக்குகளை சிதறடித்தது பாஜக அதன் மூலம் அத் தொகுதிகளையும் கைப்பற்றியது.
தமிழகத்தை கைப்பற்ற அவர்கள் பல முனையில் வியூகம் வகுத்துள்ளனர் அமித்ஷா மேற்பார்வையில் பணிகள் ஏற்கனவே துவங்கப் பட்டு செயல் பாட்டில் உள்ளது.
திமுக எதிர்ப்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமை ப்பில் கட்டி எழுப்பப் படுவதான ஐயமும் அதை உறுதிப் படுத்தும் விதமான அவர்களது அண்மைக் கால செயல்பாடுகளும் இதில் தி க, த பெ தி க நீங்கலாக மற்றவர்கள் நகருவதான ஐயம் எழுந்து உள்ளது.
இவை அமித்ஷா வின் வலைப் பின்னலின் ஒரு பகுதியா? என்ற கேள்வியும் எழுகிறது.
எனினும் இவ் விடர்களை திமுக எதிர் கொள்ளும் சூழல் கள் தேர்தல் காலக் கட்டத்தில் மாற வாய்ப்பு உள்ளது என்ற அவர்கள் அறிவிப்பு எளிதில் கடந்து செல்லக் கூடிய ஒன்றல்ல. எனவே இப்படிப் பட்ட நிலை வந்தால் அதை திமுக எதிர் கொள்ள வியூகம் அமைக் கும் பணியை இப்போதில் இருந்தே துவக்குவோம்
எந்த இடர்களையும் எதிர் கொண்டு முறியடிப்போம்.
திமுகவெல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக