ஞாயிறு, 10 மே, 2020

அமெரிக்கா – கொரோனா தாக்குதலுக்கு 75 ஆயிரம் பேர் உயிரிழப்பு ..

மாலைமலர் : அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 212 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 38 லட்சத்து 70 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 76 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 33 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இதுவரை 13 லட்சத்து 26 ஆயிரத்து 693 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய கொரோனாவுக்கு இதுவரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 12 லட்சத்து 71 ஆயிரத்து 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 9 லட்சத்து 81 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 562 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் புதிதாக மேலும் 759 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 558 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக