வெள்ளி, 1 மே, 2020

அமெரிக்காவில் நான்கு லொறிகளில் 60 சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீரகேசரி : நியூயோர்க்கின், புரூக்ளினிலுள்ள மலர்ச்சாலைக்கு வெளியே நான்கு லொறிகளில் 60 சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறிகளிலிருந்து ஒரு வித திரவம் வடிவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகளினால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு சடலங்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புரூக்ளினிலுள்ள ஆண்ட்ரூ கிளெக்லி மலர்ச்சாலைக்கு வெளியிலேயே இவ்வாறு குளிரூட்டப்பட்ட லொறிகளில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமுலாக்க வட்டாரம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட சட்ட அமுலாக்க அதிகாரிகள், குறித்த உடல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக லொறிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அழுகிய நிலையில் உள்ளமையினால் துர் நாற்றம் வீசுகின்றது. அதேநேரம் இந்த உடல்களில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த அநேகமானோரின் உடல்கள் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக