சனி, 23 மே, 2020

சூத்திரர்களின் வாலை அவ்வப்போது நறுக்கி வைக்க வேண்டும். .. 1971 ஆண்டு தேர்தலில் ராஜாஜி காங்கிரஸ் கூட்டணி துண்டறிக்கை

வாசகன் வாசகன் :  ‘பிராமண தர்மம் ஓங்குக’ . “பிரியமுள்ள பிராமண
குலத்தில் வந்த எல்லோர் கவனத்துக்கும்;
இப்போது நடைபெறப்போகும் தேர்தல் ஏதோ அரசியல் தேர்தல் என்று விஷய ஞானம் உள்ளவர்கள் நினைத்தால் ஏமாந்து போவோம்!
ஸ்லோகம் சொல்வது போல் பெரியவர்கள் இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்!
இதனுடைய பாஷ்யம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.
தி.மு.க.காரன் ஆட்சி என்றால் என்ன அர்த்தம்?
நான்காம் வர்ணத்துக்காரன் சூத்திர ஆட்சி என்று அர்த்தம்!
அசிங்கம் பிடித்த குடிசை, சேரிக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், கேவலமான ஜாதிக்காரர்கள் திமிர்பிடித்து அலைகிறார்கள், இந்த ஆட்சியில்!
அவாளுக்கெல்லாம் ஆதரவு கருணாநிதி.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைப்பேன் என்று கருணாநிதி சொல்கிறாரே. என்ன அர்த்தம்?
சூத்திரன் நான்; சூத்திரர்களுக்காகவே உழைப்பேன்! என்பதுதானே!
இப்படிச் சொன்ன பிறகு பிராமணர்களாகிய நாம், பிரம்மாவின் முகத்தில் அவதரித்தோம் என்று வேதங்களால் சொல்லப்படும் நாம் சும்மா இருக்கலாமா?
சூத்திரன் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா?
சேரியிலும் அசுத்தத் தெருவிலும் வசிக்கும் சூத்திரர்கள் ஆட்சி வரலாமா? சூத்திரர்களை நாம் அவ்வப்போது வாலை நறுக்கி வைக்க வேண்டும்.
சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான சமஸ்கிருதத்தைப் பரப்ப வேண்டும்.

இந்த பிராமண புனருத்தாரணத்துக்குத்தான் ஸ்ரீ சோ பாடுபட்டு வருகிறார்.
இந்த சூத்திரர்களால் நமஸ்காரம் ஒழிந்து வணக்கம் பிரபலமானது.
பூணூலேந்திய சிரேஷ்டர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம்.
சூத்திரர்கள் எண்ணிக்கை அதிகம் தான். இருந்தாலும் நாம் முடிந்த அளவு சூத்திரர்கள் மனதை மாற்றி; நாம் நினைக்கிற நம் எடுபிடிகள் ராஜாங்கத்தை உருவாக்க வேண்டும்.
காந்தியை கோட்சே ஏன் சுட்டான்? அவர் ஆரிய தர்மத்துக்கு விரோதமாக மிலேச்சர்களான முசுலீம்களுக்கு உதவ முயன்றதால்தான்! அதற்கு பிறகுதான் ஆதரிப்போர் கூட்டம் கொஞ்சம் அடங்கியது.
காந்திஜியே அப்படி என்றால் இந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நமக்கு எம்மாத்திரம்?
மறுபடியும் நாம் ஆரிய தர்மத்தை நிலைநாட்டியே ஆக வேண்டும்.
இந்த புனித காரியத்தில் ஜனசங்கமும் உதவுவார்கள்.
சூத்திரன் கொட்டம் ஒடுக்க, நாலாஞ் ஜாதிக்காரர்களை நசுக்க, பிராமண தர்மம் ஓங்க, ஆரிய பாஷையான சமஸ்கிருதத்தை வளர்க்க பிராமணர்களே ஒன்றுபடுங்கள்!
பிரியமுள்ள
கே.எம்.சுப்பிரமணியம்
தியாகராயர் நகர் அசெம்பிளி அபேட்சகன்
(ஆதாரம்: கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி என்னும் நூலில் பக்கம்178 லிருந்து180 வரை )
அந்த தேர்தலில் காமராஜரின் சிண்டிகேட் காங்கிரசின் வேட்பாளராக தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்டு திமுகழக வேட்பாளர் திரு டி.வி.நாராயணசாமிய 879 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இந்த கே.எம்.சுப்பிரமணியம்
அப்பழுக்கற்ற அரசியல் செய்தவர் காமராசர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம் பேசுகிறோம். ஆனால் அவரும் தன் கட்சியில் கே.எம்.சுப்பிரமணியம் போன்றவர்களுக்கு இடம் தந்து இருக்கிறார் .
திமுகழகத்தை எதிர்க்க காலகாலமும் எப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் என்னென்ன செய்தார்கள் என்பதை அறியும் போது அரசியல் ஆட்டத்தின் அவலட்சணம் அழகாகத் தெரிகிறது. ஆனாலும் கழகம் காலம் கடந்தும் நிற்கும் நிலைகுலையாமல்.
வரலாறு_போற்றும்_கலைஞர்* 1971 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்; தமிழ்நாட்டில் கலைஞர் முதல்வராக இருந்த சமயத்தில்; இரண்டுபட்ட காங்கிரசின் இந்திரா காங்கிரஸ் திமுகழகத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட போது; இன்னொரு காங்கிரசின் (பழைய காங்கிரஸ் அல்லது சிண்டிகேட் காங்கிரஸ்) தலைவர் காமராஜரும் சுதந்திரா கட்சியின் தலைவர் இராஜாஜியும் கூட்டணி அமைத்து நடைபெற்ற அந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு வேட்பாளர் இவ்வாறு வாக்கு கேட்டது உண்மை. அந்த துண்டறிக்கையின் தலைப்பு வாசகன் வாசகன் பதிவிலிருந்து....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக