திங்கள், 11 மே, 2020

14 வயது ஜெயஸ்ரீயை அதிமுகவினர் பெற்றோல் ஊற்றி கொழுத்தினர் ..ஆபத்தான் நிலையில் வாக்கு மூலம் வீடியோ


நீலம் பண்பாட்டு மையம் : திருவெண்ணெய்நல்லூர் - சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலுவின் மகள் 14 வயது சிறுமி ஜெயஸ்ரீயை (10.05.2020) அன்று காலை அதே பகுதியை சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முருகன் முன்னாள் கவுன்சிலர் அதிமுக இவர்கள் இணைந்து சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்
அதனை அந்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சிறுமி ஜெயஸ்ரீ தற்பொழுது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து உள்ளனர். இந்த சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆகவே இந்த சிறுமியை எரித்து கொலை செய்ய முயன்ற இரண்டு நபர்களையும் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
பின்குறிப்பு: ஏற்கனவே கோவை வேளாண் கல்லூரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று மாணவிகளை கொலை செய்த அதிமுகவினரை விடுதலை செய்த பெருமை மிக்க அரசு தற்போதைய அதிமுக அரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக