புதன், 20 மே, 2020

தைலா மரக்காட்டில் சிறுமி அடித்து கொலை 13 வயது மாணவி புதுக்கோட்டை... வீடியோ


tamil.oneindia.com : புதுக்கோட்டை: தைல மரக்காட்டில் உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்த 13 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.. தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பிஞ்சை காப்பாற்ற முடியாமல் போய்விட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி தரக்கூடிய அவரது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது.
கந்தர்வகோட்டை அருகே உள்ளது நொடியூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு வயது 13 ஆகிறது.. 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.. இந்த கிராமத்தை ஒட்டி பாப்பான்குளம் என்ற பகுதி உள்ளது.. நேற்றுமுன்தினம் அங்குள்ள குளத்துக்கு அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சிறுமி சென்றிருக்கிறார்.. அப்போது மர்மநபர்கள் சிறுமியை தைல மரக்காட்டிற்கு தூக்கி சென்றுள்ளனர்.. இந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தைல மரக்காடு உள்ளது. காட்டுக்குள் சிறுமி செல்வதை பார்த்து பின்தொடர்ந்து வந்துள்ளனர் போல தெரிகிறது... சிறிது நேரம் கழித்து, சிறுமி தைலமரக்காட்டில் படுகாயங்களுடன் விழுந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொது< காட்டுக்குள் சிறுமி செல்வதை பார்த்து பின்தொடர்ந்து வந்துள்ளனர் போல தெரிகிறது...
 சிறிது நேரம் கழித்து, சிறுமி தைலமரக்காட்டில் படுகாயங்களுடன் விழுந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் சொன்னார்கள். அவர்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. தீவிரமான சிகிச்சை தரப்பட்டும் சிறுமி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீசார் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பினர். சிறுமியை கொன்றது யார் என்ற விசாரணையிலும் இறங்கினர்.. தைல மரக்காட்டில் பெண்ணை பலாத்காரம் செய்ததால்தான், உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டு இறந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. தற்போது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது..

அதில் சிறுமியை யாரும் பலாத்காரம் செய்யவில்லை என தெரியவந்துள்ளது. ஆனால் உடம்பில் உள்ள ரத்த காயங்களை பார்த்தால், அடித்தே கொன்றுள்ளனர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் யார் என கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது

 13 வயது சிறுமியுடன் யாருக்கும் முன் பகை இருக்க வாய்ப்பில்லை.. அதனால் சிறுமி குடும்பத்துடன் வேறு யாருக்காவது பகை இருந்ததா, அதற்காக பழிவாங்கவே அவர்கள் வீட்டு பெண்ணை இப்படி அடித்து போட்டார்களா என தெரியவில்லை. விழுப்புரம் ஜெயஸ்ரீயையும் இப்படித்தான் குடும்ப பகைக்காக உயிரோடு எரித்து கொளுத்தினார்கள்.. இப்போது 13 வயது குழந்தையை அடித்தே கொன்றுள்ளனர்.. இதையெல்லாம் பார்த்தால் இது நம் தமிழ்நாடுதானா? இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா என்ற கிலியும் கவலையும் எழுந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக