திங்கள், 11 மே, 2020

மே 12 முதல் பயணிகள் ரெயில் இயக்கப்படும்- ரெயில்வே அறிவிப்பு

மே 12 முதல் பயணிகள் ரெயில் இயக்கப்படும்- ரெயில்வே அறிவிப்புமாலைமலர் : மே 12 முதல் டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது. சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 17-ந்தேதி அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சொந்து ஊர் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரெயில்வே துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- மே 12 ந்தேதி முதல் டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.


முன்பதிவு டிக்கெட்டுகள் உள்ளவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர். சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மாலை 4 மணி முதல் தொடங்கும். கொரோனா தொற்று இல்லாமல் மாஸ்க் அணிந்து வருவோர் மட்டும் ரெயிலில் அனுமதிக்கப்படுவர். 

20, 000 ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டுகளாக மாமற்றப்பட்டுள்ளன. சென்னை, செகந்திராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவிக்கு ரெயில் இயக்கப்படும். திப்ரூகர், அகர்தலா, ஹவுரா , பாட்ன, பிலாஸ்பூர் ராஞ்சி புவனேஷ்வருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக