புதன், 27 மே, 2020

10000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உயர்சாதியினருக்கு .. சாதித்தலைவர்கள் உங்கள் கையில் அரிவாள் கொடுப்பார்கள்,

டான் அசோக் : அன்புள்ள ஆண்டபரம்பரை அடிமைகளே...
உங்களுக்கு, அதாவது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குச் செல்ல வேண்டிய 10000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ உயர்படிப்பு இடங்கள் உயர்சாதியினருக்கு கடந்த சில வருடங்களில் சென்றிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் பிற்படுத்தப் பட்டவர்களுக்குதான் இட ஒதுக்கீடு இல்லையே தவிர, ஆண்டுக்கு 8 லட்சம் வரை சம்பாதிக்கும் சோத்துக்கே வழியில்லாத ‘ஏழை உயர்சாதியினருக்கு’ பொருளாதார ரீதியில் 10% இட ஒதுக்கீடு உண்டு!! அதாவது ஒரு இட்லி உள்ளவனுக்குத்தான் எக்ஸ்ட்ரா இட்லி கிடையாது. மூன்று ஊத்தப்பம் வைத்திருப்பவனுக்கு இன்னொரு ஆனியன் ஊத்தப்பம் இலவசம்!!!
இது அநியாயம்தானே? ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அநீதியைக் கண்டால் என்ன செய்யலாம்? வழக்கு போடலாம். ஆனால் வழக்கு போட்டவர்களுக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம்! இந்தியாவில் 70%க்கும் மேல் பிற்படுத்தப்பட்டவர்கள்தான். அதனால் என்ன? எல்லாரையும் பழையபடி வேலையாட்களாக, எடுபிடிகளாக, அடியாட்களாக ஆக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் வேலை செய்கிறது பார்ப்பன சாதிக்கட்சியான பாஜக.
இதற்கான செயல்திட்டங்கள்தான் நீட், கலை அறிவியலுக்கான நுழைவுத்தேர்வுகள், உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு போன்றவை. அதாவது மருத்துவர்கள், இன்ஜினியர்களாக உயர்சாதியினர் இருந்துகொள்வார்கள். மசூதியை எரிப்பது, குடிசையைக் கொளுத்துவது, கலவரம் பண்ணுவது, ஆணவக்கொலை செய்வது, டிக்டாக்கில் ரேபீஸ் வந்த நாயைப் போல நாக்கைத் துறுத்திக்கொண்டு வீடியோ போடுவது போன்ற ‘கவுரவமான’ வேலைகளை மட்டும் பிற்படுத்தப்பட்டவர்கள் செய்தால் போதும் என்கிறார்கள்.

உங்கள் சாதித்தலைவர்கள் உங்கள் கையில் அரிவாள் கொடுப்பார்கள், கையில் கட்ட கலர்கலராக கயிறு கொடுப்பார்கள். ஆனால் அவர்களின் முதலாளியான பார்ப்பன பாஜக உங்கள் வேட்டியை உருவும்போது குரல் கொடுக்க மாட்டார்கள். முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். பிற்படுத்தப்பட்டோர்களின் இட ஒதுக்கீட்டுக்காக பெரியாரும் அம்பேத்கரும் பேசியதுதான் உங்களுக்குத் தெரியாது, அட்லீஸ்ட் இன்று ஸ்டாலினும் திருமாவளவனும் பேசுவதையாவது கொஞ்சம் மூளையில் ஏற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் எதிரியாக நினைப்பவர்கள்தான் உங்களுக்காக நிற்கிறார்கள். உங்களைத் தூண்டிவிடுபவன் உங்கள் எதிரியோடு நிற்கிறான்.
இந்துக்களாக ஒன்றிணைவோம், முஸ்லிம் கிறிஸ்டீன்தான் உன் வேலையைப் பறித்துக்கொள்கிறான், திராவிட கட்சிகளால்தான் நாம் நாசமா போயிட்டோம் என்று எவனாவது வந்தால் உங்கள் ரோசத்தை எல்லாம் அவனிடம் காட்டுங்கள். இல்லைன்றால் பரவாயில்லை. டிக்டாக்கில் நாக்கைத் துருத்திக்கொண்டு சாதிப்பெருமை பேசியபடியே அடிமைகளாகச் சாவுங்கள்.
-Don Ashok

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக