சனி, 23 மே, 2020

10000ஐ நெருங்கும் சென்னை.. இன்று மட்டும் தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா!

ராணிப்பேட்டை எப்படி செங்கல்பட்டு நிலை என்ன shyamsundar -/tamil.oneindia.com: சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த நான்கு நாட்களாக தினமும் 700+ கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் ஏற்பட தொடங்கி உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று வரை சென்னையில் 9989 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15512 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 363 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 7491 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 7915 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் இன்று 5 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 103 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 397940 மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 379811 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 12155 மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 11879 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது

செங்கல்பட்டு நிலை என்ன<
இன்று செங்கல்பட்டில் மொத்தம் 39 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 733 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடலூரில் மற்றும் மதுரையில் இன்று ஒருவருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. கடலூரில் 423 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 19 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது
ராணிப்பேட்டை எப்படி? ராணிப்பேட்டையில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தேனியில் இன்று இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 85 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் இன்று 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 697 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 326 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக