செவ்வாய், 21 ஏப்ரல், 2020

லுலு தேவ ஜம்லா Vs பிரான்ஸ் தமிழச்சி மோதல்? . இருவர் தரப்பு வாதங்கள் .. வீடியோக்கள்



Lulu Deva Jamla G :;லுலுவின் கில்மா கதைகள்*
“லுலு உங்கள சுத்தி இவ்வளவு பிரச்சனைகள் நடந்துகிட்டு இருக்கிறதால நீங்க கொஞ்ச நாள் செக்ஸ்/ காமம் தவிர்த்து பெண்விடுதலைய சுத்தின பொருளாதார சுதந்திரம், women empowerment, குழந்தைவளர்ப்பு, உங்க பொது வாழ்வியல் கருத்துக்கள், சாதி மத எதிர்ப்பு அரசியல் பத்தியெல்லாம் மட்டும் எழுதலாம் இல்ல? உங்க எழுத்து நடையில படிச்சா நல்லா இருக்குமேன்னு தோணிச்சி. அதான் கேட்டேன்”
“நான் ஏன் காமத்தை பத்தியும் உடலரசியல் பத்தியும் பேசுறதை தவிர்க்கணும்?”
“முழுசா தவிர்க்க சொல்லல. லேசா குறைச்சிக்கவாச்சும் செய்யலாம்ல? இப்ப உங்க மேல விழுந்திருக்கிற இந்த இமேஜ் அப்ப மாறும் இல்ல?”
ஓ அதாவது என்னைய சமூகத்துக்கு முன்ன பொய்யா நடிச்சி ஒரு good girl imageஐ இரந்து வாங்கிக்க சொல்றிய? அதானே? ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க, என்னோட அடுத்த புக்கான #காதல்_உன்மத்தக்காரி யில ரெண்டு பகுதி வரும்... ஒண்ணுல rawவா hardcore செக்ஸ் பத்தி அப்பட்டமா பேசியிருப்பேன்.

இன்னொண்ணுல காதல்/ காமம்/ கலவியை ரொம்ப மென்மையான ரொமான்ஸா காட்டியிருப்பேன். ஹார்ட்கோர் செக்ஸ் பத்தின பகுதியவும் ரெண்டா பிரிக்கலாம்... ஒண்ணு the actual செக்‌ஷுவல் act itself, ரெண்டாவது செக்ஸ் பத்தின mythsஐ உடைச்சி informativeஆ இருக்கும். நான் இப்டி பெண்ணின் காம உணர்வு பத்தியெல்லாம் எழுதுறது ஒண்ணும் புதுசு இல்ல. 2018லயே என்னோட *காதல்காரன்* சீரீஸை ஃபேஸ்புக்ல போட்டா அடிச்சி தூக்குறானுவன்னு என் blogல போட்டு வச்சிருக்கேன். இப்ப நம்மள காமக்கடவுள் அப்டீன்னு புகழ்ந்து ஒரு சீரீஸ் இங்க எஙகயோ ஓடிகிட்டு இருக்கதால அந்த blog லிங்க் பகிர்ந்தா ஃப்ரீ publicity கிடைக்குமேன்னு பார்க்கேன்... லிங்க் வேணுமா உங்களுக்கு?😜 இந்தா கீழ போட்டிருக்கேன். போயி பார்த்து முகப்பு வரிசை படி படிச்சுக்கவும்! நன்னிவணக்கம்!
அன்பில்
தமிழச்சி (Tamizachi) சோசலிச பெண்ணியவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பெரியார் இயக்கத்தின் தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றி!
தீவிர பெண்ணியம் பேசும் சோசலிச பெண்ணியவாதிகள் அரசியல்படுத்தப்பட்ட பெண்ணியவாதிகள். கருத்து விவாதங்களை, தத்துவ வாசிப்புக்களின் ஊடாக விவாதிக்கும் நாகரிகப் பண்பை வளர்த்தெடுத்தவர்கள். சோசலிசம் என்பது இடதுசாரிய சித்தாந்தங்களின் கூட்டணியில் இணைக்கப்பட்ட வலுவான அறிவாயுதங்கள்.
மார்க்சிய பெண்ணியவாதிகள், கம்யூனிச பெண்ணியவாதிகள், மாவோயிச பெண்ணியவாதிகள் மற்றும் இந்தியச் சமூகத்தில் பெரியாரிய பெண்ணியவாதிகள், அம்பேத்கரிய பெண்ணியவாதிகள் என இடதுசாரிய பெண்ணியவாதிகளை ஒன்றிணைத்த அரசியற்படுத்தப்பட்ட சோசலிச பெண்ணியவாதிகளாக இலக்கியங்களில், பொது மேடைகளில், அரசியல் விவாதங்களில் பங்கேற்கிறார்கள்.
அவ்வாறாகவே பொது ஊடகத் தளங்களை பிரச்சார யுக்தியாக, அரசியல் விமர்சகர்களாக பங்கேற்கிறார்கள். வெறும் பொது தளத்தின் பிரச்சாரகர்களாக இல்லாமல் சமூக செயற்பாட்டாளர்களாகவும் செயல்படுகிறார்கள். நான் உட்பட...
எங்கள் விவாதங்கள் அறிவு தளத்தில் 'லெவல்' காட்டிக் கொண்டு இருப்பதாக கூறி தரையில் இறங்கச் சொல்கிறார் கோமாளி பெண்ணியவாதி லுலு,
"நான் தரை ரேஞ்சிக்கு இறங்கி அடிக்கிற ஆளு, நானெல்லாம் நாய் வாலு, மார்க்கிய / கம்யூனிச / மாவோயிச / பெரியாரிச / அம்பேத்கரிச இசங்களைச் சேர்ந்த பெண்ணியவாதி கிடையாது.
"நான் லுலு, 'லுலுயிசம்' பேசற தீவிர பெண்ணியவாதி."
என ஒரு கோமாளி, "நானும் பொறுக்கிதான், நானும் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் என்று அடம் பிடித்து போலிஸ் ஜீப்பில் ஏறும் வடிவேலு போன்று, தீவிர பெண்ணியவாதியாக WSB Rebels இரகசிய பேஸ்புக் குழு நிறுவி 81 கோமாளி பெண்களுடன் தமிழ் சமூகத்தில் தீவிர பெண்ணியவாதியாக அரும்பாடு படுகிறார்."
'லுலுயிசம்' கேள்விப்பட்டு ஆர்வக் கோளாறுகளில் இணைந்த 180 பெண்களின் எண்ணிக்கை தற்போது 81 இல் நிற்கிறது. அதில் 'பெரியாரிஸ்ட்' என்று சொல்லிக் கொண்டு ஆர்வக்கோளாறில் இணைந்த மலர், ரம்யா உள்ளீட்ட திராவிடர் விடுதலை கழகத்தைச் சார்ந்த இளவயது பெண்கள் குறித்து தி.வி.க தலைவர் தோழர் கொளத்தூர் மணி கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதனோடு 'லுலுயிசம்' குறித்தும் எங்கள் மதிப்பிற்குறிய தோழரிடம் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
பெரியாரியலின் கலாச்சார / பண்பாட்டு புரட்சியில் பெண் விடுதலை சித்தாந்தங்களுக்கு முன்னூரிமை கொடுத்து பெரியாரின் தத்துவங்களை சுமந்து, வாழ்நாள் பணியாக அதற்காகவே தன்னை கருப்புச் சட்டைக்குள் அடைத்துக் கொண்ட எங்கள் தோழர் கொளத்தூர் மணி,
"இது பெண் விடுதலையின் போக்கு அல்லவே, இக்குழுவிற்குள் எங்கள் தோழர்கள் இருந்தால் நிச்சயம் அது தவறே" என்று கூறி, அந்த நொடியே இயக்க நிர்வாக தோழர்களுடன் தொடர்பு கொண்டு, அந்த இரு பெண்களிடமும் பேசப்பட்டு, லுலு குழுவில் இருந்து விலகி விட்டனர். ஆக இப்போது லுலுயிசத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 79.
இப்போது லுலு கோமாளியை நோக்கி சோசலிச பெண்ணியவாதிகளின் பார்வை.
அவரோ, "நானும் பெண்ணியவாதி தான், நானும் பெண்ணியவாதிதான். ஆனா எனக்கு எழவெடுத்த சமூக பொறுப்பு கிடையாது. நான் நல்லாருக்கனும், ஜாலியா என் பேபிங்க கூட ஊர் சுத்தனும், லவ் பண்ணணும், உம்மாக்கள் கொடுக்கனும். இது எங்கள் தனியுரிமை. இதை எந்த ஆயாக்களும் கேள்வி கேட்கக் கூடாது" என்கிறார்.
"யேய் கோமாளி, கொஞ்சம் அப்பால போய்க்கோ,,, சோசலிசத்துக்கு முன் 'லுலுயிசம்'னு 'ஓலுயிசம்' பேசப்படாது"ன்னு எனக்கு சவுண்ட் வுட ஆசைதான். ஆனால் தோழர் கொற்றவை அநாகரிகமான வார்த்தைகளை வெறுப்பவர். அவர் நாகரிகமாக எழுதுகிறார்:
"விமர்சனம் மற்றும் கருத்துப் போரில் ஈடுபட அறிவை வளர்த்துக் கொள்கிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் நாகரீகப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சக மனிதனை கருத்தார்ந்த முறையில் எதிர்கொள்ள முடியாதவர்கள் வசைகள், அவமதிப்பான சொற்கள், உடல், வயது சார்ந்த எள்ளல்களை செய்து தாங்கள் வென்று விட்டதாகக் காட்டிக் கொண்டு தங்கள் ரசிகர்களுக்கு கிளர்ச்சி ஊட்டுவார்கள்.
ஒருவகையில் இதுவும் அதிகார / பணக்கார பண்பே.
‘ஆயா’ என்று ஒரு பெண்ணைக் குறித்து எழுத முடியுமென்றால் இவர்களின் மனித மதிப்பீடுகள் எத்தகையது? சாதிய / தனி உடைமை ஆதிக்க சமூகம் யாரை ஆயா என்று குறிப்பிடும்? அது ஒரு வகை வேலை செய்வோரை இழிவுபடுத்துகின்ற சொல் அல்லவா?
வயது முதிர்ந்த பெண்களை வயதின் பொருட்டு துச்சமாக எண்ணும் மனநிலையும் இதில் உண்டு!"
டெர்ரர் பொம்பள பெரியாரிஸ்டாக நினைத்து கொள்ளும் என் மைன்ட் வாய்ஸ்:
"இந்த கோமாளிக்கு இதெல்லாம் உரைக்குமா? நமக்கெல்லாம் நம்ப தோழர் ஆசீட் தியாகராசன் பாணிதான் சரி, 'ஏய் கோமாளி இறங்குடி வண்டியில இருந்துன்னு மிரட்ட தோன்றுகிறது. தனியா மாட்டும் போது பார்த்துக்கலாம். இப்போதைக்கு சோசலிச பெண்ணியவாதியாகவே கோமாளியை அம்பலமாக்குவோம்" என்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அதே சமயத்தில் பிரான்சில் அமென்ஸ்ட்டி இண்டர் நேஷனல் மனித உரிமை அமைப்புகளில் பேசிக் கொண்டிருக்கிற எனக்கு ஏன் இங்கெல்லாம் கோமாளி பெண்ணியவாதிகள் இல்லை என்பதற்கு பதில் இருக்கிறது.
பெண்ணியவாதி என்பதுகூட வலதுசாரிகளால் உருவாக்கப்பட்ட சொல். 'பாட்டாளி வர்க்கப் பெண்ணியம்' என்று இடதுசாரிகள் உருவாக்கிய உழைக்கும் எளிய பாட்டாளி பெண்களின் விடுதலைக்கான தடையை பெண்களிடமிருந்தே ஏற்படுத்த அதே பெண்களிடம் வலிந்து திணித்த முதலாளி வர்க்கத்தின் சொல்தான் பெண்ணியம். இது பொதுப்படை.
சோசலிச பெண்ணியம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்காக முழக்கமிட்டுக் கொண்டிருந்தால்,,,,
நடிகை த்ரிஷா காரில் அடிப்பட்டுக் கிடந்த நாயை காப்பாற்றி மருத்துவனைக்கு கொண்டு சென்றார் என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் பேசப்படும். இவ்வளவுதான் முதலாளித்துவ மனித உயிர்கள் மீதான மதிப்பீடுகள்.
அங்கு சோசலிச பெண்ணியவாதிகளின் வார்த்தைகள் மதிப்பிழந்து போயிருக்கும்.
லுலு கோமாளியும் த்ரிஷா வகையைச் சார்ந்த வலதுசாரிய மேட்டுக்குடி பெண்ணியம். அது பெண்ணின் யோனி சுதந்திரத்திற்கு மட்டுமே ஊத்தை வார்த்தைகளில் உளறித்தள்ளும் லுலுயிசமாக கிடக்கும்!
தமிழச்சி (Tamizachi)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக