செவ்வாய், 7 ஏப்ரல், 2020

The death of stalin திரைப்படம் ஒரு அறிமுகம்


Yuvaraj Thirumuruga : சரித்திர படங்கள் என்றாலே எனக்கு தனி ஈர்ப்பு உண்டு.
ஹிட்லருக்கு பிறகு மிக பெரிய கொடுங்கோலன் அக்காலத்தில் ஜோசப் ஸ்டாலின் என்றால் மிகை ஆகாது. இரண்டாம் உலக போர் தொடங்கும் முன்னர் ஸ்டாலின் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை. இத்தனைக்கும் இவர் ரஷ்யாவில் பிறந்தவர் அல்ல ஜார்ஜியாவில் பிறந்தவர்.
ஜாரின் (CZAR) ஆட்சியை எதிர்த்த சோசலிஸ்ட் கட்சியும் விளாடிமிர் லெனின் ரஷியன் கம்யூனிஸ்ட் கட்சியும் முதல் உலக போர் முடிந்த கையோடு CZAR குடும்பத்தை கொன்று ஆட்சியை பிடித்தனர்.
லெனின் புரட்சி செய்த காலத்தில் ஆட்கடத்தல், கொள்ளை, கொலை போன்ற செயல்களை கட்சியின் நலனுக்காக செவ்வனே செய்து வந்தார் ஸ்டாலின். அதிகம் படித்தது இல்லை . லெனின் நெருங்கிய நண்பரும், லெனினுக்கு பின் ஆட்சியை கைப்பற்றும் வாரிசாக இருந்தவர் ட்ரொட்ஸ்கி. லெனின் எந்த காரணத்தை கொண்டும் ஸ்டாலின் தனக்கு பின் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால் ஸ்டாலின் பின்னாளில் தனக்கு தெரிந்த வட்டாரங்களை முக்கிய பொறுப்பில் அமரவைத்து லெனின் மறைவுக்கு பின்னர் ட்ரொட்ஸ்கேயை பழிதீர்த்தார்.

இந்த திரைப்படம் ஒரு british comedy மற்றும் black comedy ரகத்தை சேர்த்து. ஸ்டாலின் தன் மகன் உட்பட நண்பர் , உற்றார் , உறவினர் என்று எல்லோரையும் சாவுகாசமாய் சாகடித்தவர். தன் அருகில் எவரையும் நெருங்க விடமாட்டார். எல்லோரையும் பயம் கலந்த குழப்ப நிலையில் வைத்து ரசிப்பார். 3 கோடிக்கும் அதிகமாய் தன் சொந்த நாடு மக்களையே கொன்று குவித்த ஸ்டாலின் ஹீட்லேரை வன்மத்தில் மிஞ்சியவர் என்பது ஆக சரியானா நிதர்சனம். ரஷ்யாவில் Purge எனப்படும் அரசாங்க படுகொலைகள் ஸ்டாலினின் உத்தரவு பெயரில் அவ்வவ்போது நிகழ்தேறியது. மருத்துவர் பலர் யூதர்கள் என்பதால் ஸ்டாலின்கு ஹிட்லர் போலவே யூதர்கள் மீது காட்புணர்ச்சி நிறைய உண்டு. இதனால் நல்ல மருத்தவர் எவரும் மாஸ்கோவில் உயிரோடு இல்லை அல்லது அங்கு உயிர் வாழவில்லை.
இப்படி இருக்க ஒரு நாள் மரண படுக்கைக்கு சென்ற ஸ்டாலின் நல்ல மருத்துவரின்றி மூலை வெடித்து மரணிக்கிறார். இவரை சுற்றி இருக்கும் நான்கு முக்கிய நபர்கள் தான் Lavrentiy Beria, Nikita Khrushchev, Vyacheslav Molotov மற்றும் Georgy Malenkov. இவர்கள் மத்தியில் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் போராட்டமே இந்த திரைப்படம் .

Beria - NKDV என்ற ரகசிய போலீஸ் துறையை நிர்வகித்தவர். என்னுடைய Himmler என்று ஸ்டாலின் செல்லமாக அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டிடம் இவரை அறிமுகம் செய்து வைத்தார். 7 வயது முதல் எல்லா வயது பெண்களையும் வன்புணர்வு செய்வது , தேவையென்றால் அவர்களை கொலை செய்வது, ஸ்டாலினிடம் தனக்கு பிடிக்காது ஆட்களை தவறாக சித்தரித்து கொலை செய்வது , சிறையில் அடைத்து துன்புறுத்தி கைதிகளின் மனைவியுடன் சல்லாபம் செய்வது என்று இவர் செய்யாத அநியாயங்களே கிடையாது. இதனால் தானோ என்னவோ தன்னை அடுத்த ஸ்டாலின் என்றே நினைத்து கொண்டு காய்களை நகர்த்தினார் Beria. இவர் செய்த வன்புணர்வுகளை இன்னொருவரை கொண்டு பட்டியலிட்டார் என்பதும் பின்னாளில் இதுவே இவர் பதிவிற்கு வராமல் போக காரணி என்பதும் இன்னொரு கதை.

Nikita Khrushchev - மாஸ்கோவின் கட்சி தலைவர். இரண்டாம் உலக போரில் ஸ்டாலின்கிராட் யுத்தத்தில் பங்கேற்று அதை பெருமையுடன் எப்போதும் நினைவு கூறுவார். ஸ்டாலினின் பல purgeகளை திறம்பட செய்து அவரின் நம்பைக்குள்ள ஆளானார். 5000 பேர் கொள்ள படவேண்டும் என்ற ஸ்டாலினின் கட்டளை ஏற்று ஒரு படி மேலே சென்று 2000 நிலமுடைய மாஸ்கோ விவசாகளை பட்டியலில் சேர்த்தார். 8500 பேர் கொள்ள பட வேண்டியவர்கள் என்று கொடுத்த டார்கெட்டிற்கு மேலே உயிர் எடுக்கும் over achiever இவர்.
Molotov - லெனின் காலத்தில் இருந்து கட்சியில் முக்கிய பங்காற்றியவர். ஸ்டாலினின் நில பொதுவுடமை சட்டத்தை செயல்படுத்தி பல நில உடமையாளர்களை gugals எனப்படும் தொழிலாளர் முகாம் (labour camp) அனுப்பி வைத்தவர். இங்கு சென்றவர்கள் பெரும்பாலும் திரும்பி வருவதில்லை. பின்னாளில் இவரின் யூத மனைவியும், கட்சியின் விஸ்வாசியுமான Polina இஸ்ரேலின் தூதுவரான Golda Meir யை (ஆம் , பின்னாளில் Munich படுகொலைக்கு பாலஸ்தீன தீவிரவாதிகளை பழிதீர்த்த அதே Golda Meir) ரகசியமாக சந்தித்தார். இதனால் ஸ்டாலினின் கோவத்திற்கு ஆளாகி சிறையில் அடைக்கபட்டார். இதிலும் Beriaவின் கை உண்டு. தன் மனைவி சிறையில் இருக்கையில் இருவருக்கு சமைக்க சொல்லி தனியாக Polina வின் நினைவில் உணவு கழிப்பது Molotov வின் வழக்கும். மறந்தும் அவரின் கைதை தவறென்று சொல்ல மாட்டார் காரணம் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் ஸ்டாலின் மீது உள்ள பயம்.

Malenkov - இவரும் ஸ்டாலினின் அடியாள் தான். ரஷ்யாவின் யூத படுகொலையை ஸ்டாலினின் சொல்படி செயல்படுத்தியவர். அறிவியல் மீது நிறைய ஆர்வம் கொண்டவர். இவரும் BERIA வும் சேர்ந்து nuclear missiles செய்தவர்கள். ஸ்டாலின்கு பிறகு இவர் தான் என்று கட்சியில் பலரும் கருதினர். இரண்டாம் உலக போரின் வெற்றி ராணுவத்திற்கும் முக்கியமாக அதன் தலைமை பொறுப்பு வகித்த Georgy Zhukov விற்கும் செல்ல கூடாது, அது கம்யூனிஸ்டர் பார்ட்டிக்கு ஸ்டாலின்கும் மட்டுமே சொந்தம் என்பதை தன் செயல் மூலம் நிகழ்த்தி காட்டியவர் இவர் .

இப்படி பட்ட நால்வர் ஸ்டாலினின் பிணத்தை எடுக்குமுன் பதவிக்கு அடித்து கொண்டால் என்னவாகும்? நான் மேலே கூறியது எதுவும் திரைப்படத்தில் இல்லை . இந்த திரைப்படத்தை வரலாறு அறியாதவர்கள் பார்க்க இப்பதிவு உதவும் என்றே எழுதினேன். ஸ்டாலினின் இறப்பதில் இருந்து திரைப்படம் ஆரம்பிக்கின்றது . சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக