சனி, 18 ஏப்ரல், 2020

PM Cares அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல . வழிப்பறி கொள்ளைதான்

உண்மை கடைசியில் வீதிக்கு வந்துவிட்டது.
இந்த PM Cares எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் சமீபத்தில் பிரதமர் மோடியால் அறிவிக்கப் பட்டது. இது அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல.. ஆயிரக்கணக்கான கோடி பணங்கள் இந்த பிஎம் கேர்ஸ் மூலம் நாட்டின் கொள்ளை நோய் பாதிப்புக்காக திரட்டப் பட்டிருக்கிறது. இதற்கு வழங்கும் பணம் அனைத்தும் வருமான வரி விலக்குக்கு உட்பட்டது. அதாவது.. அரசுக்கு வர வேண்டிய இந்த நிவாரணத் தொகை தனியார் துவங்கிய ஒரு சேரிட்டபிள் ட்ரஸ்ட்டுக்கு போகிறது. அதாவது இதை மத்திய தணிக்கைக் குழு எனப்படும் CAG தணிக்கை செய்யாது.
தனியான ஆடிட்டர்கள்தான் இந்த நிதியை ஆடிட் செய்வார்கள்.
கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது “கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு“ (Corporate Social Responsibility - CSR) பணங்களை இந்த தனியார் கணக்கில்தான் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும் தாங்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை இந்த தனியார் கணக்குக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியாக எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியும் வழக்கமாக அரசுக்கு வழங்க வேண்டிய தங்கள் லாபத்தில் இரண்டு சதவீதமான CSR நிதியை இந்த PM Cares கணக்கில் சேர்த்து தங்களது கடமையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள்.

கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் நரேந்திர மோடி தலைமையிலான இந்த சேரிட்டபிள் டிரஸ்ட் ரஞ்சித் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை பொறுப்பில் வைத்து பணத்தை குவித்து வருகிறது. அதில் என்ன செய்கிறோம் என்பதை இவர்கள் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அவர்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம். ஏனென்றால் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட்.
இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது.
இந்த நிதி மத்திய தணிக்கை குழு CAG யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த ஆடிட்டர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தை கேள்வி கேட்கவே முடியாது.
இது ஊழல்தானே..?
இந்த மாபெரும் இந்திய நாட்டின் மக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
- எழுதியவர் துருவ் ரத்தீ Druv Rathee
தமிழில் மொழி பெயர்த்தது
நந்தன் ஸ்ரீதரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக