வியாழன், 30 ஏப்ரல், 2020

சூத்திரர்களுக்கு அறிவு கிடையாது! .. ஹரே கிருஷ்ணா ஹரே ராமாவின் கோட்பாடு . ISKCON இலவச உணவும் ஜாதி விஷமும்

ஆப்பிரிக்க இனத்தவர்களை, அமெரிக்க பழங்குடி மக்களைத் தாழ்த்தியும் இழிவாகவும் பல முறை பிரபுபதா அவர்கள் பொதுக் கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார். ஆரியர்களை அவர் உயர்த்திப் பிடித்த காரணத்தினால் ஆரியர்கள் அதிகம் உள்ள ஐரோப்பா முழுவதிலும் ISKCON இயக்கம் படு வேகமாய் பரவி வருவதை எளிதாக அவதானிக்க இயலும்.அதாவது ஆரியர்கள், ISKCON என்பது தங்களது சொந்த பூர்வீக மதமாக கருதத் துவங்கியிருக்கிறார்கள்,
Dhinakaran Chelliah : Sudras have no brain ஶ்ரீலஶ்ரீ_பிரபுபதா
உலகத்தில் அதி வேகமாய் வளர்ந்து வரும் மதவாத,இனவாத அடிப்படைவாத அமைப்பு எதுவென்றால் அது ஹரே கிருஷ்ணா அமைப்பான ISKCON தான்.
அமைதி அமைதி ....எப்படிங்க ஶ்ரீகிருஷ்ணரையும் கீதையையும்
உலகமெங்கும் பரப்பும் இந்த இயக்கம் இனவாத அமைப்பாகும்?!
ISKCON இயக்கத்தை தொடங்கியவரான பிரபுபதா.


அவர்களின் உரைகளை விமர்ச்சித்து International Business Times ல் கட்டுரையாக எழுதியிருக்கிறார் Palash Ghosh அவர்கள், அதில் ஒரு சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு:
“It is all [a] nonsense civilization,” he declared. “A first-class Rolls Royce car, and who is sitting there? A third-class Negro. This is going on. You will find these things in Europe and America. This is going on. A first-class car and a third-class Negro.”
Prabhupada frequently used the term “Negro” even though that word had fallen out of favor in most Anglophone nations.
The theme of black people as cursed by God and hopelessly beyond redemption appeared repeatedly in Prabhupada’s comments.
For a man who came from a country colonized by the British, Prabhupada made some rather shocking statements about imperialism, in particular as it pertained to the United States. In a discussion with a disciple named Syamasundara Dasa, Prabhupada seemed to equate the Native Americans (pejoratively called "Red Indians") of North America with the Sudras (the lowest-caste, darkest-skinned Indians of the Hindu system in India).
“Sudras [black people] have no brain,” he said. “In America also, the whole [of] America once belonged to the Red Indians. Why they could not improve? The land was there. Why [did] these foreigners, the Europeans, came and improved [it]? So sudras cannot do this. They cannot make any [improvements].”
Prabhupada apparently also deeply embraced the myth of the "Aryan" super-race and linked the ancient peoples of India to Europe and the U.S. During a talk in Australia one year prior to his death, Prabhupada declared that “the Aryans spread [to] Europe also, and the Americans, they also spread from Europe. So the intelligent class of human being, they belong to the Aryans, [the] Aryan family. Just like [Adolph] Hitler claimed that he belonged to the Aryan family.”
The Swami also equated the Dravidians, that is, the dark-skinned original inhabitants of India who now predominate in the southern part of the country, with black Africans.
பிரபுபதா அவர்கள் ஆரியர்கள் மனிதர்களில் உயர்வானவர்கள் (super race) என்று பல இடங்களில் பேசிய பதிவுகளை இன்றும் YouTube களில் காண இயலும். ஆப்பிரிக்க இனத்தவர்களை, அமெரிக்க பழங்குடி மக்களைத் தாழ்த்தியும் இழிவாகவும் பல முறை பிரபுபதா அவர்கள் பொதுக் கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார்.
ஆரியர்களை அவர் உயர்த்திப் பிடித்த காரணத்தினால் ஆரியர்கள் அதிகம் உள்ள ஐரோப்பா முழுவதிலும் ISKCON இயக்கம் படு வேகமாய் பரவி வருவதை எளிதாக அவதானிக்க இயலும்.அதாவது ஆரியர்கள், ISKCON என்பது தங்களது சொந்த பூர்வீக மதமாக கருதத் துவங்கியிருக்கிறார்கள், அதனால் விளையக் கூடிய ஆபத்துக்களை உணராமல்.
இப்படி கருப்பு,வெள்ளை,ஆரியர்கள்,பஞ்சமர்கள், சூத்திரர்கள் என இனவாதம் பேசி மதவாதத்தைப் பரப்பும் இந்த இயக்கம் தடை செய்யப்பட வேண்டுமல்லவா?!
இன்றளவும் ஹரே கிருஷ்ணா வின் https://vanipedia.org/
இணைய தளத்தில் அவரது பேச்சுக்களின் தமிழாக்கப் பகுதிகள் பல உண்டு, sample க்கு ஒரு பகுதி உங்களுக்காக;
“சூத்திரர்களைவிட குறைந்த அந்தஸ்துடையவர்கள் அனைவரும் பண்சமஸ், ஐந்தாவது தரத்தை சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். முதல் தரம், பிராமண, இரண்டாம் தரம், க்ஷத்ரிய, மூன்றாம் தரம், வைஸிய, நான்காம் தரம், சூத்திர, மற்ற அனைவரும் - ஐந்தாம் தரம். அவர்கள் சண்டாலஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். சண்டாலஸ், துப்புரவாளர், காலணி தைப்பவர், இன்னும் தாழ்ந்த தரம். இன்னமும், இந்தியாவில் இந்த ஐந்தாம் தரம் மக்கள் மட்டும், அவர்கள் மாமிசம் சாப்பிடுவார்கள், பன்றி, சிலசமயம் மாடு. ஆகையால் நீங்கள் ஐந்தாம் தரம் மனிதரால் ஆட்சி செய்யப்பட்டால் நீங்கள் எவ்வாறு சந்தோஷமாக இருக்க முடியும்? அது சாத்தியமல்ல. அங்கு எவ்வாறு சமூக அமைதி ஏற்படும்?”
இது தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா?!
அடுத்த முறை யாராவது ISKCON இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இலவசமாக கீதை அல்லது வேறு நூல்களை உங்களுக்கு வழங்க வரும்போது தவறாமல் அவர்களிடம் பிரபுபதாவின் aryans theory பற்றி கேள்வி எழுப்புங்கள்.
ISKCON கேயில்களில் வழங்கப்படும் இலவச உணவை நம்பி மோசம் போகாதீர்கள், அவர்களது உள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
Palash Ghosh ன் கட்டுரையின் link:
https://www.ibtimes.com/swami-prabhupada-founder-hare-krish…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக