திங்கள், 20 ஏப்ரல், 2020

கொரோனாவால் காலில் குருதி உறைந்து காலை இழந்த ஹாலிவுட் நடிக

மின்னம்பலம் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் நிக் கோர்ட்ரோவின் கால் நீக்கம் செய்யப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற மேடை நாடகங்கள், தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் நிக் கோர்ட்ரோ கடந்த மார்ச் 31 ஆம் தேதி, மூச்சுத் திணறலால் அவதியுற்றார். திடீரென அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிக் கோர்ட்ரோவுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது காலில் ரத்தம் உறைவதைத் தடுக்க முடியவில்லை. கால்களில் ரத்தம் உறைந்து விரல்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டது. இது ஒரு கட்டத்தில் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படச் செய்து உள் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. ரத்தம் உறைந்த காலை நீக்கம் செய்வது மட்டுமே நிக்கின் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நிக்கின் குடும்பத்தினரும் அவரது கால்களை நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்தனர். தொடர்ந்து அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிக் கோர்ட்ரோவின் மனைவி அமண்டா க்லூட்ஸ், அவரது உடல்நலம் தற்போது மீண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக