திங்கள், 6 ஏப்ரல், 2020

மோடி கும்பலின் முன்யோசனை அற்ற அறிவிப்புக்கள் .. அவல ஆட்சி


பசி களைப்பு  தற்கொலை ,, குஜராத்
வளன்பிச்சைவளன்  :  · சக மனிதனின் பசியை உணராத பாசிச சமூகம் உருவாவது  அழிவின் அறிகுறி  பிரதமர் மோடியின் முன்யோசனை அற்ற அறிவிப்பு கள் சான்யர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து இன்னும், 10, நாட்கள் எப்படி கடத்தப் போகிறோம் என அச்சத் தில் உறைந்திருக்கும் மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரு மக்கள் கூட்டம் உருவாகி வருவது வேதனை தருகிறது.
ஒரு கொடிய நோய் மனித குலத்தை அழித்து கொண்டு இருக்கையில் இதை எதிர்கொள்ள அறிவியல் பூர்வ மாக மக்களை வழிநடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை காக்க வேண்டிய பிரதமர் கைதட்ட சொல்வதும் விளக்கு ஏற்ற சொல்வதும் கோமாளித்தனமானது என்று ஒதுக்கி விட இயலாது.
பொருளாதாரத்தில் வலுவான நிலையில் உள்ள நாடுகள் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதும் அவர்களை நல்லடக் கம் செய்யக் கூட முடியாத அளவிற்கு அவர்கள் திணறி வரும் செய்திகள் வந்த வண்ண மாய் இருக்கையில் பிரதமர் மோடி பொறுப்பற்ற அறிவிப்பு களை அறிவிப்பது வேதனை.
இந்தியாவில் கொரோனா லை எதிர் கொள்ள போதுமான பெரிய நிதி ஆதாரம் கிடையாது பல லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டால் சிகிச்சை செய்ய போது மான மருத்துவ மனைகள், படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட உள் கட்டமைப்பில் பலகீனமாக இருக்கையில் இந்த அவலத்தை இந்தியா தடுக்க ஒரே ஒரு வழி #சமூக #இடைவெளி இதைத் தவிர வேறு மாற்று இல்லை

பிரதமர் மோடி இந்திய மக்களை காக்க இரண்டு மாதங்களுக்கு முன்னரே பன்னாட்டு விமான நிலையங்களில் கண்டிப்பான நடைமுறைகளை அமல் படுத்தி கொரோனா இங்கு அடி எடுத்து வைக்க முடியாத படி தடுத்து இருக்க முடியும். அதில் கோட்டை விட்டாயிற்று.
தாமதமாக சுதாரித்து சுய ஊரடங்கு, நாடு முழுவதும் 21 நான் ஊரடங்கு என சாமான்யர்களுக்கான ஏற்பாடு களை செய்து விட்டு அறிவிக்காமல் பல லட்சம் மக்கள் கால்நடையாக ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணம் செய்து குக் கிராமங்களுக்கும் கொரோனாவை கொண்டு சென்று இருக்கக் கூடிய ஆபத்தை நோக்கி நகர்த்தி, சாமான்யர்களிடம் மன்னிப்பு என்ற ஒரு வரியில் முடித்து விட்டு மக்களை விளக்கு ஏற்றுங் கள் என பிரச்சனைகளை திசை திருப்புவதை சாமர்த்தியம் என கருதுகிற புகழ்கிற கூட்டம் மூலம் எளிதில் கடக்க முயல்வது ஆபத்தின் விளிம்பில் ஆற்றக் கூடிய காரியமா?
  சமூக  இடைவெளி பற்றிய புரிதல் கைத்தட்ட சொன்னபோதே வெளிப் பட்டதே கூட்டமாக கும்மி அடித்தது இதன் பிறகாவது நாட்டின் நிலையை மக்களிடம் கூறி சமூக இடை வெளியை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் மீண்டும் எந்த முன்யோசனை யும் இன்றி வீட்டில் விளக்கு களை அ ணையுங்கள் விளக்கு ஏற்றுங்கள். இதனால் மின் விநியோகம் முற்றிலும் தடை பட வாய்ப்பு உள்ளதை வல்லுனர் கள் எடுத்துரைத்த போதும் விளக்குகளை அணைக்க வேண்டாம் விளக்கு ஏற்றுங்கள் என கூற மனம் வராத வர் இதனால் ஏற்படும் இழப்பு மின் ஊழியர் களுக்கு தேவையில் லாத சிரமம் இக் கட்டான சூழலிலும் உணர மறுக்கும் வீம்பான மன நிலை
மக்கள் வழமை போல் கூடி கொரோனா Go என முழங்குவது. தமிழகத்திலே இளைஞர்கள் மிக நெருக்கமாக அமர்ந்து எச்சரிக்கை எச்சரிக்கை கொரோனா விற்கு எச்சரிக்கை விடும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
கொரோனா இவர்கள் எச்சரிக்கையை புரிந்து கொள்ளும் அறிவு படைத்த உயிரினமா? இந்த அறிவு கூட இல்லாத இளைஞர்களை காணும் போது அறிவியலால் மட்டுமே வெல்ல முடியும் என்ற சிறு பொறி யைக் கூட பிரதமர் மோடி யால் உருவாக்க முடியவி ல்லை என்பது நிரூபணமாகி விட்டது.
வெடிவெடித்து கொண் டாடும் இவர்கள் கொரோனா வின் அழிவுகளை பற்றி கேள்வி பட்ட பிறகும், ஊரடங்கால் பசிக் கொடுமையா ல் அல்லறுரும் மக்களுக்கு இந்த வாண வெடிக்கு செலவழித்த தொகையை கொடுக்க மனமின்றி பக்கத்தில் ஒருவனை பசியோடு இருப்பதை கண்டும் வாண வேடிக்கைகள் என கொண்டா டும் பாசிச மனநிலை உருவாவது சகிக்க முடியாத கொடுமை. ஈவு இரக்கம் அற்ற மக்களைக் கொண்ட இந்த நாடு அழிவை நோக்கி நகர்கிறது என்பதை உணர முடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக