ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கொரோனா: இந்திய அளவில் பாதிப்பு, பலி எண்ணிக்கை, குணமடைந்தோர் - முழு விவரம்

Giridharan N | Samayam  : இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளோர் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளோர் எண்ணிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்புவரை இரண்டை இலக்கத்தில்தான் அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை நாள்தோறும் நூற்றுக்கணக்கில் உயர்ந்து வருகிறது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 3,082 ஆக இருந்தது
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவுக்கு ஆளாகியுள்ளோர் எண்ணிக்கை 3,374 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இளைஞர்களைக் குறிவைக்கிறது கொரோனா... அரசு ஆய்வுகளே ஆதாரம்...
தற்போது சிகிச்சையில் இருக்கும் இவர்களை தவிர, இதுவரை 267 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 79 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர் என்றும், நாடு முழுவதும் மொத்தம் 274 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக