ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

சாலையில் இருமியவரை அடித்து கொன்ற பொதுமக்கள் ... மகாராஷ்ட்ராவில் ..

A 34-year-old man was allegedly attacked on suspicion of being a Covid-19 patient and died after falling into a gutter during the assault in Kalyan town of Maharashtra's Thane district, police said on Friday. The incident took place on Wednesday morning, when Ganesh Gupta had stepped out of his home to purchase some essentials amid the Covid-19 lockdown, an official said.
splco.me/  : மகாராஷ்டிராவில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் சென்ற 34 வயதுடைய நபர் சாலையில் இருமியதால் அவருக்கு கொரோனா இருக்கிறது என பொது மக்கள் ஒன்று கூடி அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கணேஷ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குப்தா. இவர் கடந்த புதன்கிழமை காலை தனது வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க அருகில் உள்ள கடைகளுக்குச் சென்றுள்ளார்.
கடைக்குச் நடந்து செல்லும் வழியில் அவர் இருமியபோது அங்கிருந்த பொது மக்கள், கணேஷுக்கு கொரோனா இருக்கிறது என நினைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் கணேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விபத்து மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பம் பெறு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கொரோனா என்பது நோய் தொற்று மட்டுமே, இதனை காரணமாக வைத்து மக்களிடையே மனிதநேயம் அழிந்து வருவது பெரும் வேதனைக்குரிய ஒன்றாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக