வெள்ளி, 10 ஏப்ரல், 2020

தமிழில் கெட்ட சொற்கள் .. எப்படி உருவாயின? அவை பற்றிய ஒரு அறிவியல் ஆய்வு!

பார்வையற்றவன் : தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் அல்குல் பற்றிய பதிவுகள் பல உள்ளன. அல்குலின் வடிவம், அமைப்பு பற்றிய வருணனைகள் ஏராளம். ஆனால் ஆண்குறி பற்றிய பதிவுகள் உள்ளனவா?
தீராநதி நவம்பர் 2008 இதழில் கோவை ஞானியை நகைச்சுவைப் பாத்திரமாக்கித் ‘தமிழியம் ஓர் ஆய்வு’ என்னும் தலைப்பில் ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையில் ஒரு தமிழறிஞர் பேசுவதாக வரும் பகுதி: ‘சங்கம் தொட்டு இங்குவரை நீளும் நந்தமிழர் மரபில் எங்கும் ஆண்குறி குறித்து ஒரு சொல்லேனும் இல்லை. ஐயம் தெளிவுபெற அடியேன் சிற்பங்களில் நோக்கினேன். அங்கும் பெண்டிருக்குக் குறியுளதே அல்லாமல் ஆண்களுக்குக் காணப்படவில்லை. தொல் தமிழருக்குக் குறியுளதா என்ற ஐயம் என்னை வாட்டுகிறது’ (ப.40). இப்படி எல்லாம் எகத்தாளம் செய்யும்படி இருக்கிறது நிலைமை. ஆனால் ஆண்குறி பற்றிய பதிவு இல்லை என்று சொல்ல முடியாது.
ஆண்குறிக்கான சொல்லாகிய ‘சுண்ணி’ என்பதை நம் செவ்விலக்கியத்திற்குள் காளமேகம் இரண்டு இடங்களில் பதிவு செய்திருக்கிறார்சுண்ணி என்னும் இந்தச் சொல் பேச்சுவழக்கில் ‘சுணி’ என்று வழங்கும். நடுவில் உள்ள ஓர் எழுத்தை உச்சரிக்காமல் விட்டுவிடும் வழக்கம் நம் மொழியில் உண்டு. யாப்பிலக்கணத்தில் இதை இடைக்குறை என்று சொல்வார்கள். உள்ளம் என்னும் சொல் உளம் என்று வரும். ஓந்தி என்பது ஓதி என்றாகும். அவற்றைப் போலத்தான் சுண்ணி சுணி ஆதலும். இடைக்குறைச் சொல்லாகிய சுணியைத்தான் காளமேகம் தம் பாடல்களில் தமக்கே உரிய சமயோசிதத்துடன் பயன்படுத்தியுள்ளார்.

சுணி என்பதுதான் பழைய வழக்காகவும் இருக்கலாம். கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்போது நாம் இடையில் ண் சேர்த்து சுண்ணி என்கிறோமோ? கிராமப்புறங்களில் இன்றும் சுணி என்பதுதான் வழக்கமாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொண்டு சிந்திக்கலாம்.சிவபெருமான் சுண்ணி இரண்டுக்கும் சிலேடையாக வரும் காளமேகத்தின் பாடல்:
சிரித்துப் புரமெரித்தான் சிந்துரத்தைப் பற்றிஉரித்துதிரம் பாய உடுத்தான் – வருத்தமுடன்வாடும் அடி யாருடன் வானவரும் தானவரும்ஒடுபயம் தீர்த்தநஞ் சுணி.
இப்பாடலின் இறுதி ‘பயம் தீர்த்த நஞ்சுணி’ என்று முடிகிறது. நஞ்சுணி என்றால் நஞ்சை உண்டவன் என்று பொருள். பாற்கடல் கடைந்தபோது வெளிப்பட்ட நஞ்சை எடுத்து உண்டு அதனால் கண்டம் கருத்தவனாகிய நீலகண்டன் சிவனைத்தான் நஞ்சுணி என்கிறார் காளமேகம். சிவனடியார்கள், தேவர்கள், தேவரில் ஒரு வகையினராகிய வித்யாதரர்கள் ஆகிய அனைவரின் பயத்தையும் தீர்த்தவன் சிவன். அந்தச் சிவனின் செயல்கள் எப்படிப்பட்டவை தெரியுமா? அவன் படும் மூன்று அரக்கர்களின் கோட்டைகளை எரித்தான். யானையின் தோலை உரித்து அதனைத் தன் ஆடையாக உடுத்தான். இது சிவனுக்குப் பொருந்தும் பொருள்.
சரி, சுண்ணிக்குப் பொருந்தும் பொருள்? நஞ்சுணி என்பதை நம் என்று பிரித்துக் கொண்டால் நம்முடைய சுண்ணி என்றாகிவிடும். சுண்ணியைத் தம்பி என்று அழைக்கும் வழக்கம் உண்டு என்றேன். ஆகவே இங்கு ‘அவன்’ ஆகிவிடுகின்றான். வருத்தத்துடன் தனக்கு அடிப்பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு கொட்டைகளுடன் தேவர்கள் குடிக்க விரும்பும் அமுதமாகிய விந்தை விட்டுத் தீர்த்தவனாகிய நன் சுண்ணி அதற்கு முன் சிரித்தபடி தன் தோல் பகுதியை வெளியே எடுத்து ஒளிரச் செய்தான். சிவப்பு நிறமுடைய முன்பகுதியை உரித்து அல்குலுக்குள் உதிரம் வெளிப்படும் வகையிலே வேகமாகச் செலுத்தினான். இப்படிப் பொருள் கொள்ள இந்த பாடலில் வாய்ப்பிருக்கிறது. சிந்துரம் என்பதற்கு யானை என்றும் சிவப்பு என்றும் பொருள்கள் உண்டு. புரம் என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. உடல், தோல், முன் என்பன அவற்றுள் முக்கியமானவை. இவ்வாறு அகராதிப் பொருள் கொண்டு பார்த்தால் எளிதாகச் சிலேடைப் பொருள் சொல்லலாம்.இது கொஞ்சம் வலிந்து பொருள் சொல்வது போலத் தோன்றலாம். சிலேடை என்பதே வலிந்து பொருள் கொள்ளும் முறைதான். இதற்கு இப்படி ஒரு பொருள் இல்லை என்றால் இந்தப் பாடலுக்கு உரை எழுதாமல் பலபேர் தவிர்த்திருக்கக் காரணம் என்ன.
சிவனுக்கும் சுண்ணிக்கும் சிலேடையா என்று பலர் முகம் சுளித்து இதைத் தொடாமல் விட்டிருக்கிறார்கள். காளமேகத்தைப் பொருத்தவரை சிலேடை பாட அவனுக்குத் தேவை இரண்டு பொருள்கள். அவ்வளவுதான். சிவனைக் காளமேகம் படுத்தியிருக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இன்னொரு பாடலையும் பார்க்கலாம். அது கூதி என்று தொடங்கி சுணி என்று முடியும் பாடல்:
கூதிக்கட் டேழும் குலைந்து நடுநடுங்கிப்பூதிக்கொப் பாகவன்றே போய்விடுமே – ஆதிநரக்காட் டகவரியை நற்சரப மாகிச்சுருக்கா விடினஞ் சுணி
யாரோ ஒரு குசும்புக்காரர் கூதி என்று தொடங்கி சுணி என முடியும் வகையில் ஒரு வெண்பா எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அந்தப் பாடல் சிவனுக்கும் சிலேடையாகவும் அமைய வேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்திருக்கலாம். அவருக்கு எழுதிய பாடல் இது. அல்லது அப்படிக் கேட்டவருக்குக் கூதி என்றுதொடங்கி சுணி என்று முடிப்பது மட்டுமல்ல. அது சிவனுக்கும் சுண்ணிக்கும் சிலேடையாகவும் அமையும் படி பாடுகிறேன் என்று சவாலோடு காளமேகம் பாடியிருக்கலாம். அவர் ஆசுகவி. கேட்டதும் பாடக் கூடியவர். ஒருவர் கொடுக்கும் குறிப்புக்குப் பாடுவதைச் சமுத்திப் பாடல் என்பர். அதிலே கை தேர்ந்தவர் காளமேகம். இந்தப் பாடல்கள் எப்படியோ நம் முன்னோர்களின் ஒழுக்கக் கத்திரிக்கோலுக்குத் தப்பி இத்தனை காலம் வந்திருக்கின்றன. அது நாம் செய்த பூஜா பலன். மேற்கண்ட பாடலிலும் சிவனுக்கும் சுண்ணிக்கும் ஒரு வகையில் சிலேடைப் பொருள் அமைவதைக் காணலாம்.
நஞ்சை உண்டவனாகிய சிவன் வலிமையான சிம்புள் பறவையாகி திருமாலாகிய நரசிங்கத்தை அடக்காமலிருந்தால் பூமியில் எட்டுத் திசைகளும் ஏழு உலகங்களும் நரசிங்கத்தின் கோபத்தால் வெறும் புழுதியாகப் போய்விடும் என்பது சிவன் பற்றிய கருத்து. நரசிம்ம அவதாரம் எடுத்த திருமாலின் சினத்தைத் தணித்தவர் சிவன் என்னும் கதையைக் கொண்டு இந்தப் பொருளைப் பார்க்க வெண்டும். உயிர்கள் தோன்றுவதற்கு மூலமாக விளங்கும் நம் சுணியைச் சுருக்கி வைக்காமல் இருந்தால் அது உள்ளிருந்து நீண்டு சிம்புள் பறவையாகி எழுமானால் எட்டுத் திசைகளிலும் வசிக்கும் ஏழுவகைப் பருவப் பெண்களின் கூதிகள் குலைந்து நடுநடுங்கிப் புழுதியாகிவிடும். அவ்வளவு வேகம் உடையவன் அவன் என்பது சுண்ணிக்குப் பொருள்.இப்படிப் பொருள் கொள்ளச் சிலேடைப் பாடல்கள் வாய்ப்பளிக்கின்றன. ஒரு வேலை இது வலிந்து பொருள் கொள்ளுதல் என்றாலும் கூதி என்று தொடங்கிச் சுணி என்று முடித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
"புணர்ச்சிக்கு நிகராக மக்கள் வழங்கும் சொல் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஓல் என்பது. இச்சொல்லுக்கு ல், ள், ழ் ஆகியவற்றில் எதுவரும் எனத் தெளிவாகத் தெரியவில்லை. சிலர் ஓழ் என்பதைப் பயன்படுத்துகின்றனர். எனக்கு அது சரியாகப் படவில்லை. மொழி ஆய்வில் திறனுடையவர்கள் இதைக் கண்டறிந்து காரண காரியத்தோடு விளக்கலாம்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக