செவ்வாய், 28 ஏப்ரல், 2020

அரசு ஊழியர்களின் ஊதிய குறைப்புக்குத் தடை!

மின்னம்பலம் : கொரோனாவால் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, மத்திய மாநில அரசுகள், அரசு ஊழியர்கள் ஊதியத்தை பிடித்தம் செய்வது. அகவிலைப்படி உயர்வை  நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
அரசு ஊழியர்களின் ஊதிய குறைப்புக்குத் தடை!இந்நிலையில் அண்மையில் கேரள அரசு  ஊழியர்களுக்கு 6  நாட்கள் ஊதியம்,அடுத்த 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் என்று கேரள அரசு அறிவித்தது. ரூ.20,000 ஊதியம் வாங்குபவர்களுக்கு, பிடித்தம்  செய்யப்படாது. அரசு நிறுவனங்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு, தனியார் கூட்டு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும்அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், ஆணையங்களில் பணியாற்றுபவர்களின் ஊதியம் 30 சதவிகிதம் பிடிக்கப்படும். ஆனால் இந்த உத்தரவு, கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை அளித்து உதவி செய்தவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.

அரசின் உத்தரவை எதிர்த்து  காங்கிரசின் ஐஎன்டியுசி, கேரள வித்யூதி மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. அதில், “அரசியலமைப்புச் சட்டம் 300 ஏ பிரிவின் படி கட்டாயமாக  ஒருவரது  சொத்தை எடுக்க  முடியாது. அரசின் உத்தரவு தவறானது. ஒருவர் தானாக முன்வந்து நன்கொடை செய்யலாமே தவிர இவ்வாறு பிடித்தம் செய்ய கூடாது,  ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (ஏப்ரல் 28) நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் உத்தரவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் முகாந்திரங்கள் இருக்கிறது. எனவே இந்த உத்தரவை அடுத்த இரு மாதங்களுக்குச் செயல்படுத்தக் கூடாது” என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தார்.
கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக