வியாழன், 9 ஏப்ரல், 2020

இலங்கை முஸ்லிம்களின் இறந்த உடலை எரிக்க முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு.


இனிமேல் தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்கள் வெளியில் வர மாட்டார்கள் - அதாவுல்லா அதனால் வரும் பாதிப்புகள் அவர்களுக்கே ! - மஹிந்த ராஜபக்ச !
முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா? சீறினார் அதாவுல்லா ,மாற்றமில்லையென்றார் மஹிந்த.. கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டுமென்ற அரசின் முடிவை ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தார் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா.
இதனால் இன்று மாலை இடம்பெற்ற ஆளுங்கட்சிக் குழுக்கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
“சர்வதேச நியமங்களுக்கு விரோதமாக முஸ்லிம்களின் உடல்கள் கொரோனா வைரஸை காரணம் காட்டி எரிக்கப்படுகின்றன. அதனை அனுமதிக்க முடியாது.
அரசு இதனை நிறுத்தி கொரோனாவால் இறக்கும் உடல்களை அடக்கம் செய்ய முன்வரவேண்டும்” என்றார் அதாவுல்லா.

ஆனால் அதனை மறுத்த சுகாதார அமைச்சர் பவித்ரா , சட்டம் பொதுவானது என்றும் வேறு மதத்தவர்கள் கூட இப்படியான கோரிக்கையை முன்வைத்தாலும் அதனை அரசு ஏற்கவில்லையென கூறியதுடன் சட்டம் அனைவருக்கும் பொதுவானதென தெரிவித்துள்ளார்.
“ அப்படியானால் இனிமேல் தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்கள் வெளியில் வர – வந்து சொல்ல அச்சப்படுவார்கள் ? அப்போது என்ன செய்வது ..?” என்று அப்போது கேள்வியெழுப்பியுள்ளார் அதாவுல்லா.
அதாவுல்லாவின் இந்த கருத்தால் சினமடைந்த பிரதமர் மஹிந்த “ அப்படி யாரும் செய்வார்களாயின் அதனால் வரும் பாதிப்புகளை அவர்களே பொறுப்பேற்கவேண்டுமெனவும் யார் என்ன கூறினாலும் கொரோனா காரணமாக உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்யும் அரசின் தீர்மானம் மாறாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் இந்த கருத்துக்கு ஆளுங்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவாக கருத்தை வெளியிட்டதாகவும் அறியமுடிந்தது.
நன்றி தமிழன் இணையத்தளம்

Jeevan Prasad  :  WHO வை அமெரிக்காவே கை கழுவி விட்டது. அவர்களது பரிந்துரைகள் அடிக்கடி மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. அவர்களே தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்த நிலையில் ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இங்கே சற்று புரிந்துணர்வு எல்லொருக்கும் தேவை. ஹிந்துக்கள் மற்றும் பௌத்தர்களை சிதையில் வைத்துத்தான் தகனம் செய்ய வேண்டும். மின் தகனங்களில் அல்ல.
ஆனால் இப்போது அதிகமான பிணங்களை மின் தகனமே செய்கிறார்கள். WHO 8 அடி ஆளத்துக்கு குளி தோண்டி புதைக்கச் சொல்கிறார்கள். இது உலக நாடுகளில் அரபு நாடுகளை கருத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். பாலைவனங்கள் உள்ள பகுதி என்பதால் அங்கு அது சாத்தியம் . இலங்கையில் 4 -5 அடி நிலத்தை தோண்டினாலே தண்ணீர் ஊற்றுகள் வரலாம். எனவே 8 அடி வரை தோண்ட முடியுமா தெரியாது.

அடுத்தது ஏப்ரலில் மழை வேறு வந்தால் இந்த வைரசுகள் தண்ணீரில் கலக்கலாம் என ஒரு சாராரும். இறந்த உடலில் வைரசுகள் வெகு காலம் வாழாது எனவும் கருத்து பகிர்கிறார்கள். ஆனால் இவை குறித்த எந்த சரியான முடிவுக்கும் வர முடியாதுள்ளது. முன்னர் வெயில் உள்ள நாடுகளில் மட்டுமல்ல இளம் வயதினருக்கு கொரோணா பரவாது என்றார்கள். ஆனால் இப்போது சிறு குழந்தை - இளையோர் - முதியோர் என அனைவருக்கும் பரவி இறந்துள்ளனர்.
சில பரிந்துரைகள் பட்ட பின் ஞானம் என்றாகிவிடும். அது காலம் தாழ்ந்தது. எனவே சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேறு வழியில்லை. உதாரணமாக கடல் - விமான - போர் போன்ற விபத்துகளில் மரணிப்போரது உடலே கிடைப்பதில்லை. அப்படியான நேரம் யாரும் அதை பெரிது படுத்தியதில்லைதானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக