வெள்ளி, 24 ஏப்ரல், 2020

சாமியை விட உண்டியல் பெரிதா? நடிகை ஜோதிகா மீது ஏனிந்த வன்மம்?

ஆலஞ்சியார் : ஜோதிகா.. கோயில் உண்டியலில் போடுவதை விட ன்பதே கடவுளுக்கான வருவாய் என்பதைவிட கடவுளின் பணியாளர்களின் வளர்ச்சிக்குதான் பயன்படுகிறது .. உண்டியலில் பணம் என்பது கூட ஒருவகை லஞ்சம்தான் குணமானால் இதை தருகிறேன் என்பது கூட கடவுளின் மகிமையை குறைத்து எடைபோடுதல் தான் ..
இந்திய ஒன்றியத்தின் பிரதமர் இப்போதைய தேவை கோயில்கள் அல்ல கழிப்பறைதான் என்ற போது யாரும் அதை விமர்சனம் செய்யவில்லை அவரின் கருத்தில் எல்லோரும் உடன்பட்டோம் அரசியல் ரீதியாக சித்தாந்த ரீதியாக மாற்றுகருத்தை கொண்டிருந்தவர்கள் கூட பிரதமரின் கழிப்பறை தான் முக்கியம் என்ற நிலையை ஆதரித்தார்கள் .. ஆனால் ஜோதிகா சொன்னவுடன் மதம் வருகிறது யார் இவர் இதைசொல்ல என்ற அகங்காரம் வருகிறது ..
உண்மையில் ஜோதிகாவை நாம் பாராட்டவேண்டும் இதை சொல்ல துணிவு வேண்டும் புகழுச்சியில் இருக்கும் தாரங்கள்
வாய்மூடி மௌனம் காக்கும் போது தெளிவான தேவையான கருத்தை தேவைபடும் நேரத்தில் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் .. கல்வியின் அருமை உணர்ந்த குடும்ப பின்னணியில் இருந்து பேசுகிறார் அவர் அங்கம் வகிக்கும் "அகரம்" அறக்கட்டளை சாதிமதம் பார்க்காமல் ஏழை மாணவர்களின் உயர்க்கல்விக்கு உதவுகிறது


தனியொருவனை வாழ்வின் உயர்விற்கு கல்வி மிக மிக அவசியம் .. காலகாலமாய் மறுக்கபட்ட கல்வி பெரியாரின் பெருந்தொண்டால் திராவிட இயக்கத்தின் பெரும் முயற்சியால் உயர்சாதியினரை தவிர மற்றவர்களுக்கு மறுக்கபட்டது .. "நன்னூல் " கூட அந்தனர்க்கும் ஆசானின் மகனுக்கும் மண்மகனுக்கும் (மன்னரின் மகன்) மற்றும் பொருள் தருவோரின் மகனுக்கு மட்டுமே கல்வி என வரையறுத்திருந்தது .. அந்த கல்வியை கடைகோடி பிள்ளைக்கு கொண்டு சேர்த்தது திராவிடம்.. அதிலும் போதிய வருவாய் இன்றி
வாய்ப்பு கிட்டியும் பொருளின்றி படிப்பை தொடர முடியாதோர்க்கு பேருதவி செய்து வரும்
பெருந்தகையாளர்கள் சூர்யா ஜோதிகா ..
இந்த மண்ணின் மீதும் மக்கள் மீதும் சுயநலமற்ற அக்கறை கொண்டவர்கள் .. இந்த பெருநோய் காலத்தின் தேவை குறித்து கருத்து கூற முழுஉரிமை உண்டு
..
சில சங்கிகள் ஜோதிகாவின் மதத்தை இழுத்து கதைக்கிறார்கள் அவர் தன் மதத்திலிருந்து வெளியேறி தான் கொண்ட காதலை கைப்பிடித்தவர் அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை .. அவரின் கருத்தில் உடன்பாடு இல்லாமல் போகலாம் அதற்கான அவரை தாக்குவதென்பது அவரின் தனிப்பட்ட விடயங்களை விமர்சனம் என்ற பெயரில் தாக்குவதை ஏற்கமுடியாது .. ஜோதிகாவின் கருத்தில் என்ன தவறென்று இந்த அரைகுறைகள் கதறுகின்றன .. உலகமே பெருந்தொற்றில் கலவரமாய் கிடக்கிறது தேவாலாயங்கள் மசூதிகள் கோயில்கள் கதவுகள் அடைத்துக்கொண்டன.. மருத்துவமனைகளின் கதவுகள் திறந்தே
இருக்கின்றன .. இப்போதைய மட்டுமல்ல எப்போதும் அதிகம் தேவை மருத்துவமனைகளும் கொள்ளையடிக்காத கல்விகூடங்களும் தான் ..
ஜோதிகாவிற்கு கைகொடுப்போம்
வாழ்த்துகள் ஜோதிகா

மருத்துவமனை கட்டலாம் இதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை .. மசூதிகளில் தர்காக்களில் தேவாலயங்களில் கோவில்களில் உண்டியல் எ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக