புதன், 8 ஏப்ரல், 2020

வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டால் மக்கள் ஊரடங்கை மீறுவார்கள்... எச்சரிக்கை?


வளன்பிச்சைவளன் :; ஊரடங்கை நீட்டிக்க மாநிலங்கள் பரிந்துறை பதிமூன்று கோடியே அறுபது  லட்சம் பேர் வேலையிழப்பர் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் போது மக்கள் ஊரடங்கை மீறும் நிலை வரும்  ரகுராம்ராஜன் நாங்கள் கொரோனாவினால் சாகமாட்டோம் ஆனால்  பசியால்  சாவோம்
மாநில அரசுகள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என பரிந்துரை செய்துள்ளன. உலகில் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என பிரதமர் மோடி பெருமிதம்.
இன்று ஊரடங்கால் 42 %பேர் ஒரு நேர உணவு என பரிதவிக்கிறார்கள் என ஆய்வு அறிக்கைகள் கவலை தெரிவித்து உள்ளன.
பொருளாதார நெருக்கடி நிலை உருவாகி உள்ளது என்றும் இதனால்
13,60,00,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
ஊரடங்கை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க முடியாது. பாதிப்பு இல்லாத பகுதிகளில் பணிகளை தொடர வேண்டும். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் போது மக்கள் ஊரடங்கை மீறுவார்கள் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்து உள்ளனர்.

இன்று தரும் நிவாரண உதவிகள் போதாது அதை உயர்த்த வேண்டும் அவர்களுக்கு மான்யங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
இந்த நெருக்கடியை சமாளிக்க ஏற்கனவே நிதி நிலையை பாஜக அரசின் தவறான பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி என சிறு குறு தொழில் பாதிக்கப் பட்டு மக்கள் அல்லாடி வருகின்றனர்.
ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு ரூபாய்
1 70 000 கோடியை எடுத்த பாஜக மோடி அரசு அத் தொகை கையாளப் பட்ட விதம் குறித்து எந்த முறையான அறிவிப்பும் வெளியிடவில்லை.
கார்பரேட்டுகளுக்கு சலுகை என பல லட்சம் கோடிகள் வாரிவழங்கியது இன்றைய பொருளாதார நெருக்கடியில் அம்பானி நீங்கலாக மற்றவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் தற்போது இல்லை.
கார்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகளை இன்றய நெருக்கடியான சூழலில் திரும்ப பெறுதல், ஒரு சதவீத வரி உயர்வு என அறிவித்தாலே நெருக்கடியை சமாளிக்க லட்சம் கோடிகளுக்கு அதிகமான தொகை அரசுக்கு கிடைக்கும்.
பிரதமர் மோடி அரசு இந்நடவடிக்கை களை மேற் கொள்ளாது நிதி நெருக்கடியை மக்கள் மீது திணிக்க முயல்வது உட்ச பட்ச வேதனை. எம் பி தொகுதி நிதி கிடையாது மேலும் 30 %வருமான பிடித்தம் என்ற அறிவிப்பின் பின்னனி நாளை நாட்டிற்காக என அரசு ஊழியர் சம்பள பிடித்தம் அதன் நீட்சி தனியார் நிறுவனங்களு க்கும் தொடரும்.
சில கார்பரேட்டு களுக்காக ஒட்டு மொத்த மக்கள் மீது சுமத்துவது எவ்வகையில் ஏற்புடையது?.
பல மாதங்களுக்கு ஊரடங்கு என்பதை சாமான்யர்கள் சமாளிப்பது எங்ஙனம்?
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக வின் கருத்தாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களு க்கு மாதம் ரூபாய் பத்தாயிரம் நடுநிலை குடும்பங்களுக்கு ரூபாய் ஐந்து ஆயிரம் வழங்க வேண்டும் என்ற சரியான கோரிக்கை நிறைவேற்றப் பட வேண்டும்
வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டால் மக்கள் ஊரடங்கை மீறுவார்கள் என்ற எச்சரிக்கையை அரசு அலட்சியப் படுத்த கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக