புதன், 15 ஏப்ரல், 2020

வேதத்தில் பெண்களை பற்றி என்னதான் கூறப்பட்டிருக்கிறது?

அத்தியில் பூவையும் வெள்ளை நிற காக்கவையும்  மீனுக்கு கால்களையும் கூட காணாலாம் ஆனால் பெண்களில் மனதை ஒரு போதும் அறிய முடியாது ஸ்ரீ கிருஷ்ணர்
2 - பெண்கள் ஒரு இரவு கணவனை விட்டு பிரிந்தாலும் அவளை பதிவிரதைக்கு உரிய தர்மத்தில் இருந்து விலகியவள் ஆகிறராள் .. தக்ஷர்
3 - கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு , கணவன் தூர தேசங்களுக்கு சென்ற பொழுதெல்லாம்  மெலிந்தும் உடல் நோய்வாய்பட்டும் அவன் இறந்தபோது அவனது உடல் எரியும் நெருப்பில் தானும் விழுந்து இறப்பவளே உண்மையான பதிவிரதை   - ஆங்கிரஸ்
4 -  பெண்களின் குணங்கள்   : பிற ஆண்களாய் கண்டதும் அவர்களோடு உடலுறவு வைத்து கொள்ள விரும்புவதும் , நிலையில்லாத மனமும் , அன்பு இல்லாமையும் பெண்களுக்கு மிகவும் இயல்பான குணங்களாக இருப்பதால் அவர்களை மிகவும் அவதானமாக கவனித்தலே   கடமையாயிருக்கிறது.
- மனு 9-15
5  -   படுக்கை,  ஆஸனம், ஆபரணம், காமம், கோபம், பொய், துரோஹ சிந்தனை இவைகளை பெண்களுக்காகவே மனு  படைத்தார் - மனு 9 -17
6   -  பெண்களுக்குப் பாவம் போக மந்த்ர தந்த்ர மில்லை. பொய்யைப் போலவே    அசுத்தமானவர்கள்   மனு 9-18
7  -  விபசாரம் பெண்களுக்கு இயல்பாகவே இருப்பதை  பற்றி  வேதங்கள்  கூறும் பரிகாரங்கள்  என்னவென்று கேட்போம்
8 -   இந்த கண்றாவியை தமிழில் எளிமைப்படுத்தாமல் அப்படியே பதிவிடுகிறேன் .. அவ்வளவு மோசம்   : (தன் தாய்க்கு மான்ஸவியபிசாரம் வந்ததாகப் பிராச்சித்தம் செய்கிறான்)

"என் தாயானவள் அயலானை இச்சித்து அதனாலுண்டான ரேதஸை (விந்து) என் பிதா தன் ரேதஸினால் சுத்தி செய்யக்கடவன்.. இதுவே அவர்க்லின் சஞ்சல புத்திக்கு திருஷ்டாந்தம் - மனு 9 - 19,20. (இதுவும் புத்திரன் சுத்திக்கே தவிர அவளுக்கன்று மனு 9-21)
9   -  பெண்கள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்க கூடாது  மனு  9 - 3
       கணவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் அவன் தூய்மையானவனே . பராசரர்
10  -      உடன்கட்டை ஏறுதல்
(யாது காரணத்தாலாவது) கணவனுடன் அனுமரணம் செய்பவள் (எவ்வளவு பாபியாயினும்) மனிதரது தேஹத்தில் எவ்வளவு ரோமங்களிருக்கின்றனவோ அவ்வளவு ஆயிரங்காலமும் 3 1!2 கோடி ஆயிரங்காலமும் ஸ்வர்க்கத்தில் ஸுகித்து வருகிறாள் - பராசரர்
* கணவன் கொலைகாரனாக இருந்தாலும்  அவனை நரகத்துக்கு செல்ல விடாமல்  சொர்க்கத்துக்கு இழுத்து வருகிறாள் - அங்கிரஸ்

** சிதாக்னியில் அனுமரநம் செய்யாதவளுக்கு ஸ்திரி ஜன்மத்தினின்றும் விமோசனமேயில்லை -
* விதவா தர்மம்
தன் ஆயுள் முழுவதும் கணவனையுத் தேசித்துத் தர்ப்பணம் ஒரு வேளையுணவு, தரையிற்படுத்தல், பிரம்மச்சர்யம், தித்திப்பு, உப்புக்களை நீக்கலோடிருக்கக்கடவள். (இல்லாவிட்டால் இறந்த கணவனுக்குக் கெடுதி) - ஆபஸ்தம்பஸூ
* விதவை, யதி, பிரம்மசாரிகளுக்குத் தாம்பூலங்கூடாது. - மனு
* விதவை கூந்தலை முடிவது கணவனை நற்கதி பெறாது கட்டிவிடுகிறது. முடியாதிருத்தலுக்காகச்  சிரைத்து வேண்டும் - வியாஸர்
நன்றி: பிரம்ம ஸாயுஜ்ய புஸ்தகாலயப் பிரசுர்ம் - 9, நே.ஈ. வெங்கடேச சர்மா, 1940

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக