வெள்ளி, 24 ஏப்ரல், 2020

மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகரின் தாய் கொரோனாவால் உயிரழப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்கள் 150 பேர் வழிகளுக்கும் மற்றும் 250 இதர பணியாளர்களுக்கும் பரிசோதனை நடைபெற்று வருகிறது

/tamil.news18.com : சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் குடும்ப நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை வளையத்தில் மீனாட்சி அம்மன் கோவில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் ஆகமவிதிப்படி தினமும் ஆறு கால பூஜை நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில் பட்டர்கள் கோவிலுக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். கோவில் பட்டர்கள், கோவில் பணியாளர்கள், கோவில் காவல் நிலைய போலீசார் மட்டுமே அங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் அவருக்கு கொரானா  எப்படி பரவியது என்று விசாரித்ததில் சம்பந்தப்பட்ட கோவில் பட்டர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளார்.
அவர் வழியாகவே கொரோனா தொற்று பரவி இருக்க கூடும் என உறுதி செய்த மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், சம்பந்தப்பட்ட பட்டர் சென்று வந்த மீனாட்சி அம்மன் கோவில் முழுவதுமாக கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது
சம்பந்தப்பட்ட பட்டர் கோவிலுக்கு வந்த பொழுது சக பட்டர்கள் மற்றும் பணியாளர்கள் அவருடன் பழகியுள்ளதால் ஒட்டுமொத்தமாக அனைத்து பட்டர்களின் குடும்பங்களும் வரவழைக்கப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளதால் மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் 54 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படை போலீசார் 32 பேர் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஏற்பாட்டில் கோவில் வாசலில் வைத்து பரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலையம் செயல்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் கோவில் அன்றாட பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக