ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

கொரோனாவால் காணாமல் போன இதர நோய்கள்? சமுகவலையில் உலாவரும் .

இரா.கணேசன், : அரசு மருத்துவமனைகளில் இப்போது மட்டுமல்ல எப்போதும் உண்மை முகத்துடன் மருத்துவ பணியாளர்கள் உலா வருகின்றனர்.
OPD மூடப்பட்டுள்ள போதிலும், இந்த அவசரகாலத்தில் அவசர கேசுகள் 99% இல்லை!
நோய் எவ்வாறு குறைந்து?
தெருக்களில் வாகனங்களும் அதிகமாக இல்லை ; எனவே சாலை விபத்து எதுவும் இல்லை.
மதுக்கடைகள் மூடிக் கிடக்கின்றன –மது குடிப்பதால் ஏற்படும் சாவுகள், விபத்துகள், சண்டைகள் மற்றும் கொலைகள் நின்றுவிட்டன.
ஆனால் மாரடைப்பு, மூளை இரத்தக்கசிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுமா இல்லை ??
உடல் பரிசோதனை என்ற பெயரில் யாராலும் வசூல் செய்ய முடியவில்லை!
சுடுகாடுகளுக்கு தினமும் வரும் இறந்த உடல்களின் எண்ணிக்கை 90% சதவீதம் குறைந்துள்ளது?!!
கோடை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரும் இறந்த உடல் எண்ணிக்கையில் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை??!
மருத்துவமனைகளில் இருந்த நோய்களை காணவில்லை என்பது உண்மையில் ஆச்சரியம்.

கொரோனா வைரஸ் அனைத்து நோய்களையும் அழித்துவிட்டதா?
இல்லை. அது மருத்துவத் தொழிலை வணிக மயமாக்கியவர்களை நோக்கி எள்ளி நகையாடுகிறது.
Sales team நடத்துமளவுக்கு அதை வணிகமயம் ஆக்கியுள்ளனர்.
கார்ப்பரேட் மருத்துவமனைகள் தோன்றிய பின்னர், நெருக்கடி அதீதமாகிவிட்டது.
சுகப்பிரசவங்கள் காணாமல் போனது.
சிறு காய்ச்சல், இருமல் வந்தாலே, வசதிக்கேற்ப ஆயிரம் முதல் லட்சம் கூட மக்கள் செலவழிக்க வேண்டிய கட்டாயம்.
டாக்டர்களின் - மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தை குறைக்க யாரும் முயற்சிக்கவில்லை. யாருடைய வேலையுமல்ல.
ஆனால், கார்ப்பரேட் வியாபாரம் அதை சாதித்தது.
தவிர, மக்கள் வீட்டு உணவை சாப்பிடுகிறார்கள். இது உடல் நலனில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும்.
அரசானது தனது வேலையைச் சரியாகச் செய்து, மக்களுக்கு சுத்தமான நீரும், தூய உணவும் கிடைத்தால், பாதி நோய்கள் இதுபோன்று அகற்றப்படும்.
கனடாவில் முன்பு நடந்த ஒரு ஆய்வு இது:
நீண்ட காலமாக மருத்துவர்களின் வேலைநிறுத்தம் இருந்த காலகட்டத்தில் இறப்பு விகிதம் குறைந்துவிட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் என்பது நம் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும், இது மருத்துவர்களை மட்டுமே சார்ந்தது அல்ல.
கல்வி காசு கறக்கும் வணிகம் ஆனபின், உணவு மீதான குழப்பங்களை திட்டமிட்டு ஏற்படுத்திய பின், மருந்துகளை விருந்துகள் போல எண்ண வைத்தபின் எல்லாமே மாறியது.
மக்கள் ஆரோக்கியமாக இருப்பதை கார்ப்பரேட் உலகம் ஒருபோதும் விரும்பாது.
அவர்கள் பசிக்கு மக்களை தவிர வேறு யார் இரையாக முடியும்?
இரா.கணேசன்,
அருப்புக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக