புதன், 22 ஏப்ரல், 2020

ஜோதிகா : கோயில்களுக்கு ஏன் செலவு செய்றீங்க? ஜோதிகா பேசிய வீடியோ


Bahanya - tamil.filmibeat.com : - சென்னை: விருது விழாவில் கோயில்களுக்கு ஏன் செலவு செய்கிறீர்கள் என பேசிய நடிகை ஜோதிகாவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
To UNMUTE “தஞ்சை பெரிய கோவில் எதற்கு? - ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது விழா ஒன்றில் பங்கேற்றார் நடிகை ஜோதிகா. அந்த விருது நிகழ்ச்சி அண்மையில் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. ஒரு முறை ஷுட்டிங்குக்காக சென்றபோது அழகாக இருக்கும், கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.
 உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி உள்ளது. அப்போது எனக்கு ஷுட்டிங் அங்குள்ள ஹாஸ்பிட்டலில் இருந்தது. ஹாஸ்பிட்டலுக்கு சென்றபோது அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததை பார்த்தேன். நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. பள்ளிகள் முக்கியம் பள்ளிகள் முக்கியம் கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். இதை நான் ராட்சசி படத்திலும் சொல்லியிருக்கிறேன். இயக்குநர் கௌதம் ராஜுஙம சொல்லியிருக்கிறார்.
ஹாஸ்பிட்டலை பார்த்தப் பிறகு நான் கோவிலுக்குள் போகவில்லை. பள்ளிகளும் மருத்துவமனைகளும் தான் முக்கியம். கோவில்களுக்கு செலவு செய்வது உண்டியலில் காசு போடுவதைவிட பள்ளிகள் மருத்துவமனைகளை பராமரிக்க பணம் கொடுங்கள் என்று கூறியிருந்தார் ஜோதிகா. விளாசும் நெட்டிசன்ஸ் விளாசும் நெட்டிசன்ஸ் ஜோதிகாவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜோதிகாவின் பேச்சின் வீடியோவை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரையும் விளாசி வருகின்றனர். 
ஒரு கோடியில் கார் எதற்கு? ஜோதிகாவின் பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், 5 கோடியில் வீடு எதற்கு,,,? ஒரு கோடியில் கார் எதற்கு,,,,? 300 கோடிக்கு சொத்து எதற்கு,,? ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான் என கடுமையாக சாடியிருக்கிறா

Read more at: https:///heroines/netizens-slams-jyothika-for-her-speech-about-temples/articlecontent-pf135682-070187.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக