செவ்வாய், 7 ஏப்ரல், 2020

அரசியல் சூழ்ச்சி செய்ய நேரமா இது? செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன்? முக ஸ்டாலின் கேள்


 Hemavandhana -  /tamil.oneindia.com  : சென்னை: வெண்டிலேட்டர் வாங்கி கொள்வதற்காக திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஒரு கோடியே 3 லட்சம் கொரோனா நிதியாக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கினார்.. ஆனால் இந்த நிதியை வாங்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துவிட்டது.. இது திமுக தரப்பில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. "முதலில் நிதியை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பிறகு மறுத்திருப்பது சரியல்ல என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரம் இல்லை என்றும் திமுக தலைவர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது.. தமிழக அரசு முழு வீச்சில் இதில் இறங்கி தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் இறங்கி உள்ளது. கொரோனா பாதிப்புக்காக திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதுபோல, தொழிலதிபர்களும் இந்த மனிதநேய முயற்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்
சிகிச்சை அதன்படி, திமுகவை சார்ந்த எம்எல்ஏக்கள் உட்பட பலரும் தொகுதி நிதியில் இருந்து உதவி வருகிறார்கள்... அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்டபட்ட பொதுமக்களுக்கு அரசு எடுக்கும் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியாக, அரசு மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மருத்துவ கருவிகள் வாங்க நிதியுதவி தந்து வருகின்றனர்.


அந்த அடிப்படையில், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 1.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதில், அதிகபட்சமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார். அதாவது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 50 வெண்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில் அதில் 10 வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக 60 லட்சத்தை ஒதுக்குவதாக மார்ச் 27ஆம் தேதி கரூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியிருந்தார். முதலில் இந்த நிதியை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், பிறகு மறுத்துவிட்டது. இதற்கான மெயில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செந்தில்பாலாஜிக்கு சென்றுள்ளது.. அதில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.. திமுக வட்டாரத்தில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 நிதி மறுக்கப்பட்டதை அடுத்து செந்தில்பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அதில், "அரவக்குறிச்சி தொகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு வெண்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ளது. ஆகவே, அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று நலமடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் எனது நிதியை பயன்படுத்தும் கடிதத்துக்கு அனுமதி வழங்கி, வெண்டிலேட்டரை கொள்முதல் செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


எம்எல்ஏ செந்தில்பாலாஜியின் நிதி ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டதற்கு, திமுக தலைவரும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனிக்கவும்" என்று தெரிவித்து தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்


 கேள்வி செந்தில்பாலாஜி நிதியை வாங்க மறுத்துள்ளது குறித்து கண்டன, ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன.. "எந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி? அரவக்குறிச்சி.எந்த ஊர் மருத்துவமனைக்கு தருகிறார்?கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை. அரவக்குறிச்சி தொகுதி பணத்தை கரூர் அரசு மருத்துவமனைக்கு எப்படி ராஜா கொடுக்க முடியும்?" என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.


 கேள்வி "இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் அரசியல் செய்வது ஆளுங்கட்சிக்கு அழகல்ல, மதிப்புக்குரிய தமிழக முதல்வர் அவர்கள் இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்யாமல் #மக்கள் நலனில் ஈடுபட வேண்டும்.. நிதியை உடனே ஏற்றுக்கொள்ள வேண்டும்.. போக்குவரத்து அமைச்சர் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறக்க வேண்டும்" என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக