ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

விளக்கேற்றுவதால் பயனில்லை.. மக்களுக்கு தேவையானதை செய்யுங்க மோடி.. நாராயணசாமி

tamil.oneindia.com : இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தானும் புதுச்சேரி மாநில மக்களும் தங்களின் ஒற்றுமையை காட்டியுள்ளார்கள்.
பிரதமரின்
வேண்டுகோளை கடைபிடிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நாட்டு மக்கள் அனைவரும் தேசபக்தியுடன் ஒற்றுமையாக உள்ளார்கள். கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்த சூழ்நிலையில் இந்திய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிக்க வேண்டும். நோயை கட்டுப்படுத்த வேண்டிய கடமை பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு உள்ளது. விளக்கு ஏற்றுவதாலோ, கைதட்டுவதாலோ இந்த நோய்க்கு தீர்வு காணமுடியாது. நாங்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டியதில்லை
கொரோனா தாக்கத்தால் பல்வேறு மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது.

இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதோடு பொருளாதார மேதைகளை கலந்தாலோசித்து, வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை பிரதமர் மோடி முதலில் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக