திங்கள், 27 ஏப்ரல், 2020

கொரோனா ஊரடங்கு சில மாதங்கள் மேலும் தொடர்ந்தால் என்ன நடக்கும்?

Kathir RS : மார்ச் 29, ஏப்ரல் 8 ஆகிய தேதிகளில் நான் எழுதிய மூன்று "அதீத கற்பனை" பதிவுகள்:
***
கேள்வி: இந்த கொரோனா ஊரடங்கு சில மாதங்கள் மேலும் தொடர்ந்தால் என்ன நடக்கும்?
பதில்: இதுவரை இந்த ஊரடங்கு பலருக்கு மோசமான
கால கட்டமாக இருக்கிறது என்றாலும் சமாளிக்கவே முடியாமல் வெடிக்கும் நிலையில் இல்லை.
உழைப்பு அதன் மூலம் உருவாகும் வருவாய் வருவாய் உருவாக்கும் வரி..வரி உருவாக்கும் அரசு திட்டங்கள் என தொடரும் இந்த சங்கிலி யின் தொடர்பு அறுபட்டிருக்கிறது.
ஆனால் இதுவரை ஈட்டிய உருவாக்கிய வெல்த் எனப்படும் செல்வம் உணவு தானியங்கள் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக்கொண்டிருக்கிறோம்.
இது சில மாதங்கள் தொடர்ந்தால் கூட பல மோசமான விளைவுகள் ஏற்படலாம்.
பணம் உணவு இரண்டுக்கும் ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு வரும்..
அரசு இப்போது இலவசமாக இல்லாத இயலாதவர்களுக்கு உணவளித்துவரும் சூழல் ஒரு கட்டத்தில் நின்று போகலாம்.
அப்போது, உணவின் விலை உயரும்.பணத்தின் மதிப்பு குறையும்.
ஆடம்பர உலகம் சுருங்கும்..
சமானியர்களின் வாழ்வு படுமோசமாகி ஏழ்மையில் வீழ்வார்கள்.
திருட்டு வழிப்பறி கொலைகள் முதலிய குற்றங்கள் அதிகரிக்கும்.
உருவாக்கி வைக்கப் பட்டிருக்கும் தொழில் கட்டமைப்புகள் அனைத்தும் நஷ்டத்தால் மூடப்படும்..

உள்ளூர் வாசிகளுக்கே வேலையிருக்காது.
எல்லா சிறு முதலாளிகளும் வேலைக்காக அலைவார்கள்..எல்லா பெரு முதலாளிகளும் சிறு அல்லது நசிந்த முதலாளிகளாவார்கள்.
ரியல் எஸ்டேட் தங்கம் பெட்ரோல் விலை படு வேகமாக குறையும்..
இப்படி பல சீட்டுக்கட்டு சரிவு போன்ற விளைவுகளை எதிர்பார்க்கலாம்.
உணவு தானிய கையிருப்பு காலாவதியாகும் அந்த நிமிடம் முதல் இந்த வீழ்ச்சி தொடங்கும்.
நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நாடுகளே உலகின் வல்லரசுகளாக இருப்பார்கள்.
இன்றைக்கு நோய் பாதிப்பிலிருக்கும் சோகால்டு வல்லரசாக அறியப்படும் அத்தனை நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளாக மாறுவார்கள்.
Kathir RS
29/3/20

#இனி_உலகம் (1)
வெளியில் நடமாட கையுறை முகக்கவசம் கட்டாயம். அணியாதவர்களுக்கு சிறை.
பொது இடங்களில் பாதுகாப்பின்றி தும்முதல் இருமுதல் துப்புதல் சத்தமாக எச்சில் தெறிக்க பேசுதல் தண்டனைக்குறிய பெருங்குற்றம்.பிடிபட்டால் சிறை.
கோவில் மசூதி சர்ச் முதலிய அத்தனை வழிபாட்டுத் தளங்களை நிரந்தரமாக மூடுதல்.
மால்கள், திரையரங்குகள் கண்காட்சிகள் நிரந்தரமாக மூடுதல்
பொது இடங்களில் பண்டிகை கொண்டாட்டங்கள் நியூ இயர் கொண்டாட்டங்கள் தடை
அரசியல்/மத கூட்டம் மாநாடு ஊர்வலங்கள் தடை
60வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரத் தடை.
பள்ளிக் கூடங்களில் கல்லூரிகளில் கடுமையான சோசியல் டிஸ்டன்சிங்.அல்லது ஆன்லைன் கல்வி அல்லது வீட்டுக் கல்வி.
புத்தக நூலகங்கள் ஒழிப்பு.
தேர்வுகள், தேர்தல்கள் மறு கட்டமைப்பு. தொழில் நுட்பத்தின் உதவியுடன் தனிநபர் தேர்தல் தனிநபர் தேர்வுகள் என்ற அளவில் மாற்றியமைத்தல்.
-தொடரும்
Kathir RS
8/4/20
தொடர்ச்சி

(முந்தைய பதிவின்தொடர்ச்சி...)
சினிமா டிவி சீரியல்கள் படப்பிடிப்புகள் நிரந்தரமாக நிறுத்தப்படும். தொழில்நுட்பம் மூலம் கூட்டமற்ற படப்பிடிப்புகள் நடக்கலாம்.
நடிகர்கள் நடிகைகளை தொட்டு நடிக்க இனி வாய்ப்பே இல்லை.அனிமேஷன் படங்கள் அந்த குறையை தீர்க்கலாம்.
திரையரங்குகள் இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சி அட்டகாசங்கள் நிரந்தரமாக காணாமல் போகும்.
நெரிசல்களுடன் பேருந்துகள் ரயில்கள் இயங்காது.
நகரங்களில் நெரிசலை குறைக்க எல்லா கிராமங்களும் நகரங்களாக விரியும்
எல்லா குடும்பங்களுக்கும் தனி நான்கு சக்கர வாகனம் அவசியமாகும்.
இரு சக்கர வாகனங்களுக்கு ஸ்பேஸில் பயன்படுத்தும் தலைக்கவசம் போன்று கழுத்து வரை கவர் செய்யும் தலைக் கவசம் அறிமுகமாகும்.
ஹோட்டல்களில் டைனிங் வசதி முற்றிலுமாக நிறுத்தப்படும்.இருந்தாலும் அது நட்சத்திர உணவகமாக இருக்கும்.
திரையரங்கங்கள் ஸ்டேடியங்கள் மாற்றியமைக்கப்படலாம்..1 மீட்டருக்கு ஒரு இருக்கை அமையும். டிக்கெட் விலை 5 ஐந்து மடங்காகும்.
எல்லா மனிதர்களுக்கும் உடலில் ஜியோ டேகிங் பொருத்துவார்கள்.
தொடரும்
Kathir RS
8/4/20
முந்தைய பதிவு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக