சனி, 11 ஏப்ரல், 2020

ஜாதியை முன்னிறுத்தும் சீமான் ...

Karthikeyan Fastura : நான் ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சி திராவிட
கருத்தியல்களோடு முற்போக்கு சிந்தனைகளோடு ஒட்டி இயங்கியபோது ரசித்தேன். தமிழர்களாக ஒன்றிணைவார்கள் என்று நம்பினேன்.
ஆனால் வெகு சில நாட்களிலேயே அவர்கள் என் முடிவை மாற்றினார்கள். அடிமட்ட தொண்டர்களை தவிர அந்தகட்சியில் இருந்தவர்கள் அனைவரும் போலிகள். அதிலும் சீமான் உச்சம். என் வாழ்நாளில் அப்படி ஒரு நாக்கு பிரண்டு பேசும் ஒரு தலைமையை நான் பார்த்ததில்லை. இந்த இடத்தில் அவர் மோடியை கூட தோற்கடித்தார். வலதுசாரிகளை விட மிக மோசமான சந்தர்ப்பவாதியாக திகழ்ந்தார். பாஜகவின் தமிழிசை சவுந்தர்ராஜனை கூட ஏற்றுக்கொள்ளும் மனம் சீமானை மிகஅற்பமாக பார்க்கிறது.
சங்கிகளை நாம் எதிர்தரப்பில் வைத்து மோதலாம். வெளுத்துக்கட்டலாம். அதற்கான தெளிவான காரணத்தை அவர்கள் நமக்கு தருவார்கள். தீவிர சனாதனவாதியாக இருப்பார்கள். எப்போதும் அபத்தமாகவே அலைவார்கள். மதத்தை தூக்கிக்கொண்டு அலைவார்கள். அதன் உட்புறம் சாதியை வைத்திருப்பார்கள்.
சீமான் இனத்தோடு சாதியை கலந்து முன்னிறுத்துவார். இனப்பற்று இயல்பானது மொழியோடு நெருக்கமானது அதனுடன் சாதியை சரி என்பார். இனம் என்று வந்துவிட்டால் சாதிய கலாச்சாரத்தை ஏற்கக்கூடாது.
சாதியகலப்பு என்பது இனமாக சேர்வதற்கு அவசியம். அதை அவர் செய்யவே மாட்டார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தருவார். தேர்தலில் நிறைய சீட் கொடுப்பார். ஆனால் அதெல்லாம் முற்போக்கு அல்ல. ஒரு இனமாக ஒன்றிணைய எதெல்லாம் தடையாக இருக்கிறதோ அதை நொறுக்கவேண்டும். அதில் 100% நேர்மை வேண்டும். பெரியார் அதை தான் செய்தார். அவர் வழி வந்த திமுக அதிமுக ஆரம்பகாலகட்டங்களில் இதை இதயசுத்தியோடு செய்தார்கள்.
திராவிடகட்சிகள் நிறைய முரண்கள் இருக்கலாம். ஆனால் சொல்லாமல் செய்த முற்போக்குவெடிகள் அதிகம். Oxford Publications வெளியிட்ட Dravidian Years என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு இது புரியும்.
மிக மிக முக்கியமான விஷயம் சீமான் தம்பிகளின் முக்கியமான எதிரி யார் என்று பாருங்கள். அது திராவிட கட்சிகளாக தான் இருக்கும். அதிலும் திமுகவாக தான் இருக்கும்.
சங்கிகளை எதிர்ப்பார். ஆனால் வேறுவழியில்லாமல் எதிர்க்கும் மனநிலை தான் இருக்குமே ஒழிய அறசீற்றம் இருக்காது. சமூகநீதியில் ஒரு உளப்பிடிப்பு இருக்காது.
இந்த போலியின் பின்னால் நல்ல இளைஞர்களின் சக்தி வீணடிக்கப்பட கூடாது என்றே அவரை எதிர்க்கிறேன். ஏனென்றால் அவர் பேசுவதெல்லாம் அத்தனையும் அரைகுறை. சமூக பொருளாதாரம் பற்றி துளியும் அறிவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக