சனி, 25 ஏப்ரல், 2020

ஊரடங்கை மதிக்காத அப்போலோ .. தமிழக அரசின் அவல நிர்வாகம்

Shankar A : 15 நாட்களுக்கு முன்பாக, 60 + வயதில் உள்ள ஒரு தம்பதியர்,
கீழ்ப்பாக்கதில் உள்ள ஃபர்ஸ்ட் மெட் அப்பொல்லோ மருத்துவமனையில் காய்ச்சலுக்காக செல்கின்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு இரவு உள்நோயாளியாக தங்கி செல்லுங்கள் என்று வழக்கம் போல அனைத்து பரிசோதனைகளையும் எடுக்கின்றனர்.
மறு நாள் காலை, இருவருக்கும், இருமல் அதிகமாகிறது. இருவரும், வானகரத்தில் உள்ள அப்போல்லோவுக்கு மாற்றப்படுகின்றனர். அங்கே இருவருமே கொரொனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்பது பரிசோதனையில் தெரிய வருகிறருது.
இதையடுத்து, பர்ஸ்ட்மெட் அப்போல்லோவில் பணியாற்றிய மருத்துவர்கள், இதர நோயாளிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. அதில் மேலும் 2 நோயாளிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனையை மூடச் சொல்லி, சென்னை மாநகராட்சி அறுவுறுத்தியது. அதன்படி, வெளிப்படையான அறிவிப்பு இன்றி, மருத்துவமனை இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டது. தற்போதைய தமிழக ப்ரோட்டோக்காலின்படி, 28 நாட்களுக்கு தனிமைபடுத்தல் செய்யப்பட வேண்டும்.

ஆனால் இன்று காலை, பர்ஸ்ட்மெட், அப்போல்லோ திறக்கப்பட்டு அம்மருத்துவமனையின் 18வது ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனையின் ரிசப்சனில் யாகம் வளர்க்கப்பட்டது.
படம் இன்று காலை நடந்த யாகத்தில் எடுக்கப்பட்ட படம்
சவுக்கு சங்கர்
25.04.2020


சென்னையில், சிறு சிறு கடைகளில் கூட கூட்டம் அலைமோதுகிறது. மருந்துக் கடைகளை தவிர வேறு எதுவும் திறந்திருக்காது என்ற கோமாளித்தனமான அறிவிப்பு, மக்களை கடும் பீதியடையச் செய்துள்ளது. கோவையிலும் கட்டுக்கடங்காத கூட்டம். காவல்துறையினர் வாயடைத்து ஓரமாக நிற்கின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் கால்வைக்க இடமில்லாத கூட்டம் இருக்கிறது.
நான்கு நாட்களுக்கான பொருட்களை வாங்க வேண்டுமே என்ற பதைப்பில், மக்கள் மாஸ்க்காவது மயிராவது என்று எதை பற்றியும் கவலைப்படாமல் பெரும் பைகள் வழிய வழிய பொருட்களை வாங்கி நிரப்புகின்றனர். பால் கடைகளில் பத்து பத்து பாக்கெட்டுகளாக வாங்கிச் செல்கின்றனர். ஐந்து ரூபாய் பட்டர் பிஸ்கட்டுகளை ஒருவர் பத்து பாக்கெட் வாங்கிச் செல்கிறார். சாதாரண நாட்களில் சீண்டப்படாத பெயர் தெரியாத நூடுல்ஸ் பாக்கெட்டுகள் விற்றுத் தீர்கின்றன.
இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. காலை 4 மணிக்கு உண்ட பின், 12 மணி நேரம் கழித்து அடுத்த வேளை உணவை உண்ணும் இந்நோன்புக்காக, காலையிலும் மாலையிலும் இறைச்சியை உண்டால் மட்டுமே களைப்பில்லாமல் நோன்பிருக்க முடியும். ஆட்டுக்கறி 1100 ரூபாயை தொட்ட நிலையில், நான்கு நாட்களுக்கான இறைச்சியை வாங்கி ப்ரீஸரில் வைக்க, அனைத்து இஸ்லாமியர்களும் செல்வந்தர்கள் அல்ல. மேலும் நான்கு நாட்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் அளவுக்கு எந்த கடையிலும் ஆட்டிறைச்சியோ, கோழி இறைச்சியோ இல்லை.
இன்று நோய் தொற்று அச்சமில்லாமல், கடைகளில் இருப்பவர்களுக்குள் நோய் தொற்று பரவினால், அடுத்த நான்கு நாட்களுக்கு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். அவர்களால் அவரவர் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவும். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் கூட, மருத்துவமனைக்கு செல்ல இயலாமல் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டும்.
கொரோனா தவிர்த்து வேறு நோய் காரணமாக, மருத்துவமனை / சிகிச்சை வசதி இல்லாமல், முதியவர்களின் / நோயாளிகளின் இறப்பு இந்த நான்கு நாட்களில்
நான்கு நாட்கள் கழித்து எடப்பாடியே வீடு வீடாக சென்று சொன்னாலும், உணவில்லாதவன் ஊரடங்கை மதிக்க மாட்டான்.
அப்போது, நோய்தொற்று சமூக பரவலாக மாறும். இது வரை கொரொனாவின் தன்மையை புரிந்துகொண்ட அளவில் வயது குறைந்தவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். முதியவர்கள், நீரிழிவு நோயாளிகள், மரணமடைவார்கள்.
சமூக பரவல் அதிகமானால், ஒட்டுமொத்த சென்னையை மருத்துவமனையாக மாற்றினாலும், மரணங்களை தடுக்க முடியாது. மேலும் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் இருக்க மாட்டார்கள்.
இன்னும் ஐந்து வருடம் கழித்து முதுமை காரணமாக இறக்கப் போகும் என் தாயோ, தந்தையோ, கொரொனாவால் அடுத்த வாரம் இறந்தால், அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே. இது போல பல மரணங்களை நாம் சந்திக்க இருக்கிறோம் என்ற எனது அச்சத்தை மருத்துவர்கள் உறுதி செய்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி எனும் ஒரே ஒருவரின் முட்டாள்த்தனத்தால், தமிழகம் மீள முடியாத சிக்கலுக்கு ஆளாகப் போகிறது.
முட்டாள்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் என்ன ஆகும் என்பதற்கு, எடப்பாடி பழனிச்சாமி ஒரு சிறந்த உதாரணம்.
(வீடியோ, இன்று காலை 9 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் எடுக்கப்பட்டது)
சவுக்கு சங்கர்
25.04.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக