வெள்ளி, 24 ஏப்ரல், 2020

புலிப்பண முதலைகளால் கைவிடப்பட்ட தமிழினி ... புலிகளின் மகளிர் பிரிவு பொறுப்பாளர்

தமிழினியின் பிறந்தநாள் தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் (23 ஏப்ரல் 1972 - 18 அக்டோபர் 2015) இவர் மலையகத்தை பூர்வீகமாக கொண்டவராகும் . (சிவகாமி சுப்பிரமணியம் தமிழக வம்சாவளி)
புலிகளின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினி தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவருக்காக வாதாடுவதற்கு 3 லட்சம் பணம் கேட்டுள்ளார் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி. கச்சான் விற்று சீவியம் நடத்தும் தமிழினியின் தாய் 3 லட்சத்திற்கு எங்கே போவார். பின்னர் ஒரு சிங்கள சட்டத்தரணி இலவசமாக வாதாடினார். தமிழினியின் தாயாரே இதை தெரிவித்துள்ளார்.
சகாதேவன் நித்தியானந்தன் : தமிழினியின் வழக்குகாக ஒரு சிங்கள சட்டத்தரணி உதவியதாக கூறப்படுகிறது எப்படி, எவ்வாறு?
தமிழினியை சிறையில் இருந்து வெளியில் எடுக்கும் முயற்சியில் பல லோயர்மாரை சந்தித்தன். இந்த நேரத்தில் எனக்கு சொன்னார்கள் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை (முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ) போய் பாருங்கோ என்று அவரை போய் சந்தித்து விசயத்தை சொன்னன். அவர் சொன்னார் அம்மா இந்த வழக்கை ஒரு மூன்று இலட்சம் வரை செலவாகும் என்று, நான் மூன்று ரூபாவுக்கும் வழியில்லாத நான் எப்படி மூன்று இலட்சத்தை கொடுக்கிறது. ஐயா நீங்கள் வழக்குக்கு காசு கேட்கிaங்களா? அல்லது வசனத்திற்கு காசு கேட்aங்களா என்று கேட்டுப்போட்டு நான் வந்திட்டன்.
பிறகு எனக்கு ஒருவர் சொன்னார் தலைமன்னாரில் ஒரு லோயர் இருக்கிறார் அவர் நல்ல மனிசன் பீஸ் குறைவாகதான் கேட்பார் போய் பாருங்கோ என்று நானும் இடம் வலம் தெரியாது அவருடைய போன் நம்பரையும் எடுத்துக்கொண்டு விசாரிச்சு விசாரிச்சு போய் ஆளை சந்தித்து விசயத்தை சொன்னன்.

அவர் சொன்னார் சரியம்மா நாங்கள் வழக்கை எடுக்கிறம். ஆனால் நான் மட்டும் பேச முடியாது கொழும்பில் உள்ள ஒரு சிங்கள லோயரையும் பிடிக்க வேண்டும் என்று நான் திருப்பிச் சொன்னனான் ஐயா என்னிட்ட அதிக பணம் தாரதற்கு வசதியில்லை ஆனாலும் என்னால் முடிஞ்ச காசை தருவன் இதையொரு உதவியாக செய்து தாங்கோ என்று சரி நாங்கள் காசு எவ்வளவு என்று பிறகு சொல்லுறம் நீங்கள் விபரத்தை தாங்கோ என்று எல்லா விபரத்தையும் பெற்றுக்கொண்டார். என்னைப் பொறுத்தவரை தலை மன்னார் லோயர் ஒரு தெய்வம் மாதிரி.


பிறகு ஒவ்வொரு தவணைக்கும் ஒரு நாளைக்கு முதல் போன் எடுத்துச் சொல்லுவார் கொழும்புக்குதான் தமிழினியின் வழக்குகாகதான் போய்க்கொண்டிருக்கிறன் என்று அப்படியொரு மனிசன். வழக்கு சில தவணைகள் நடந்தது நான் ஒரு தடவைதான் நீதிமன்றம் போனனான் அங்கு நானும் தலைமன்னார் லோயரும் சிங்கள லோயரும் சோடா வேண்டி குடிச்சனாங்கள் அப்போது எனக்கு தெரியாது தமிழினியின் வழக்குகா¡க நான் கொடுக்க போவது இந்த சோடா மட்டும்தான் என்று.
பிறகு நான் கொழும்பு போவதில்லை வழக்கு தவணைக்கு முன் லோயருக்கு கோல் பண்ணினால் கொழும்புக்குதான் போய்க்கொண்டிருக்கிறன் என்ற பதிலே பெரும்பாலும் எனக்க வரும்.
2012ஆம் ஆண்டு ஒரு நாள் மதியம் பதினொரு மணியிருக்கும் சமைத்துக் கொண்டிருக்கும் போது போன்கோல் வந்தது, அந்த சிங்கள லோயர் சொன்னார் தனக்கு தெரிஞ்ச கொச்சை தமிழில் “தமிழினி அம்மா தமிழினி றிலீஸ் நீங்க ஒங்கட மகளோட சந்தோசமாக வாழுங்கோ, அவ புனர்வாழ்வுக்கு விட்டாச்சு கெதியில ஒங்களோட சேர்ந்திடுவா” என்ற அந்த வார்த்தைகள் இப்பொழுதும் என்ற காதுக்குள்ள கேட்டுக் கொண்டிருக்கு.
சில நாட்களுக்கு பிறகு சிங்கள லோயருக்கு கோல் பண்ணி எவ்வளவு பீஸ் என்று கேட்டனான் அவர் சொன்னார் நீங்க மனம் நோகாமல் தமிழினியோடு சந்தோசமாக இருக்கோ அது காணும் எங்களுக்கு என்று திரும்ப தலைமன்னார் லோயருக்கு எடுத்து கேட்டான். அவர் சொன்னார். அத¦ல்லாம் வேண்டாம் தமிழினி நாட்டுக்காக சனத்திற்காக எவ்வளவோ கஷ்ரப்பட்டிருக்கா நாங்கள் அவவுக்காக இதையாவது செய்யக் கூடாதா? எத்தனை வழக்குகள் செய்யிறம் இதை நாங்க ஒரு சேவையாக செய்யிறம் என்றார்.
தமிழினியின் விடுதலையின் முழு பங்களிப்பு இந்த இரண்டும் லோயர்களையே சாரும். அவர்களால் தான் தமிழினி தடுப்புக்கு போய் விடுதலையாகி வந்தவ. மற்றுபடி யாரும் எங்களுக்கு எந்த சின்ன உதவியும் செய்யவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக