ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

தமிழகத்தின் ஒட்டு மொத்த சீரழிவை ... மக்கள் நல கூட்டணியின் துரோக வரலாறு ,

LR Jagadheesan : எனக்குத்தெரிந்தவரை பொதுசுகாதாரம் இன்னமும் மாநில அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால் ஒரு கொள்ளைநோய்க்கான சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் மற்றுமுள்ள க 50 ஆண்டுகாலம் வாழும் வரலாறாக வாழ்ந்துகாட்டிய மாநிலம் இன்று பாண்டிச்சேரி போன்ற யூனியன் பிரதேசத்தைவிட கேவலமாக மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது. மானமிழந்து. மதிப்பிழந்து. சுயமரியாதை இழந்து.
சுகாதாரபணியாளர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு கவச உடைகளை மாநில அரசு வாங்கக்கூடாது என்று மத்திய அரசு ஆணையிடுகிறது. நிரந்தரமாக காலில் விழுந்து கூழைக்கும்பிடு போட்டே ஆட்சிக்கு வந்த எடுபிடி கும்பல் அதை எதிர்க்கக்கூட வக்கின்றி வாய் மூடி கிடக்கிறது. மாநிலசுயாட்சிக்கு ஒட்டுமொத்த
இந்தியாவுக்கும் ஒற்றை உதாரணமாக முன்னோடி மாநிலமாக உதாரணமா
ஒரு நூற்றாண்டுகாலம் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொஞ்சம் கொஞ்சமாய் போராடி போராடிப்பெற்ற அத்தனை உரிமைகளும் இன்று முற்று முழுதாக பறிக்கப்பட்டதற்கும் இன்று தமிழ்நாடு இப்படி நாதியற்று கேட்பாரின்றி கிடக்கவும் யார் காரணம்?
இதோ இந்த படத்தில் இருக்கும் மார்க்சிய புரட்சியாளர்களும் வாழும் அம்பேட்கார்களும் பிரபாகரனின் அண்ணன்களும் தான் முதன்மைக்காரணம்.
கலைஞருக்கு எதிராக விஜயகாந்த் என்கிற ஒரு அரசியல் அட்டைக்கத்தியை, வியாபாரியை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடிய இவர்கள் மநகூ என்றொரு அரசியல் trojan hourseஐ உருவாக்க என்ன காரணம்?

கலைஞர் முதல்வரானால் அவருக்கு அடுத்து ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் அது நடந்துவிடக்கூடாது என்கிற இவர்களின் தனிமனித பகையும் வஞ்சமும் தான் உண்மைக்காரணம்.
தம் தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள இந்த ஐந்துபேரும் செய்த அப்பட்டமான வஞ்சக அரசியல் வியாபாரம் தான் தமிழ்நாட்டின் இன்றைய எல்லா இழிவுகளும் அதிகாரபறிப்புகளும் அத்துமீறல்களும் இவ்வளவு வேகமாகவும் மூர்க்கமாகவும் நடக்க காரணமாக அமைந்தது.

கலைஞரையும் ஸ்டாலினையும் பழிவாங்க 2016 தேர்தலில் இவர்கள் திட்டமிட்டு செயல்பட்டபோது இவர்களுக்கு ஒத்தூதிய நட்டநடுநிலைகள்; ஊழல் ஒழிப்பு உத்தமர்கள்; நேர்மையின் சிகரங்கள்; குடும்ப அரசியல் ஒழிப்பு கொளுகை குன்றுகள்; ஊடக தரகர்கள்; தூய எலக்கியவாதிகள் உள்ளிட்ட எல்லோருக்கும் தான் இதில் பங்கிருக்கிறது. இவர்களெல்லாம் என்னவெல்லாம் சொல்லி இந்த ஐவரின் அரசியல் தற்குறித்தனத்தை அப்போது ஆதரித்து கொக்கரித்தார்கள்?
 இவர்களின் மநகூ சேலைகட்டிய சர்வாதிகாரியையே மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என்று எச்சரித்தபோது எப்படியெல்லாம் வைதார்கள்? முடிந்தால் அதை ஒரு எட்டு தேடிப்பிடித்து படியுங்கள். இவர்களின் வரலாற்று துரோகத்தின் வீரியம் உறைக்கும்.

தனிப்பட்ட பகைக்காக ஒட்டுமொத்த மாநிலத்தை பலிகொடுத்த இவர்களில் யாராவது ஒருவர் — ஒரே ஒருத்தர் — இன்றுவரை குறைந்தபட்சம் தங்களின் வரலாற்று துரோகத்தை, அரசியல் தற்கொலையை நினைத்து மன்னிப்போ வருத்தமோ கோரியிருக்கிறார்களா? கோரமாட்டார்கள். ஏனென்றால் விஜயகாந்த் இடத்தில் அடுத்த தேர்தலில் ரஜினியை வைத்து பல்லாக்கு சுமக்கத்தயாராகி விடுவார்கள்.

இவர்களின் பொதுவான திராவிட இயக்க எதிர்ப்புக்கும் குறிப்பாக திமுக மீதான வெறுப்புக்கும் கலைஞர்/ஸ்டாலின் மீதான தீராத வன்மத்துக்கும் மூலமாய் இருந்து இவர்களையும் இவர்களின் தீவிர ஆதரவாளர்களையும் இயக்குவது ஜாதிய உளவியல். ஜாதிய எண்ணிக்கை பலம் தரும் பெரும்பான்மைத்திமிர். அதெல்லாம் அவ்வளவு சுளுவில் மறையாது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சீரழிவை கண்முன் காணக்காண இவர்களின் நெஞ்சறிந்த துரோகம் தான் கண் முன் வந்துபோகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக