வியாழன், 16 ஏப்ரல், 2020

டெல்லி - Agra சிந்திய பாலுக்கு நாய்களுடன் போட்டியிட்ட மனிதன்.... ஊரடங்கில் வீடியோ


க.சுப்ரமணியன் - நக்கீரன் : கரோனா தொற்று பயத்தில், இரண்டாம் கட்டமாக இந்தியா முழுவதும் மே-3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய- மாநில அரசுகள் அறிவித்த உதவிகள் போதாத நிலையில், இந்த ஊரடங்கில் தினக்கூலி வேலை பார்த்தவர்கள், குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களே வாயிக்கும் வயிறுக்குமாய் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரைந்து வாழ்ந்து வந்தவர்களின் நிலை இன்னும் கவலைக்கிடமாகியுள்ளது. யாராவது வீதியில் வந்தால்தானே கையேந்த முடியும். அதேபோல் மனித மிச்சங்களையும், குப்பைத் தொட்டிகளையும் நம்பி காலம் தள்ளிவந்த தெருநாய் போன்ற உயிரினங்களும் பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன இந்த யதார்த்தத்தை தெளிவாகக் காட்டியுள்ளது
இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வொன்று. டெல்லி ஆக்ரா பகுதியில், தாஜ்மகாலுக்கு அருகிலுள்ள சாலையில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதியன்று பால் கன்டெய்னர் ஒன்று கவிழ்ந்துபோனது. இதனால் அதிலிருந்த பால் பெருக்கெடுத்து ஓட, தெருநாய்கள் கும்பலாகச் சேர்ந்து அதை நக்கிக் குடித்தன.

அதற்கு அருகிலேயே கந்தலான உடைகளுடன் ஒருவர் மண்பாத்திரத்தில் ஓடும் பாலை சேகரிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பிரபலமானது. பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்போது சிந்திய பால்… சிந்தாத பால் எல்லாம் ஒன்றுதானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக