புதன், 15 ஏப்ரல், 2020

9வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த கேரள பாஜக தலைவர் கைது!

thamizhidhayam.com : ஒரு மாதத்திற்கு முன், ஒரு பள்ளியின் கழிப்பறையில் வைத்து, 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜகவின் தலைவர்களில் ஒருவரான பத்மராஜன் கைது செய்யப்பட்டார்.
இவரை கைது செய்வதிலிருந்து காப்பாற்ற பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அரசை எதிர்த்து ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவான வாலிபர் சங்கமும், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.
பாஜக குற்றவாளியை காப்பாற்ற முயற்சித்தது. ஆனால், ஒரு மாதம் ஆன நிலையில் இந்த கொடூரமான குற்றவாளியை போலீஸ் கைது செய்தது.
ஆசிபா கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஆஷாராம் பாபு மற்றும் குல்தீப் செங்கர் ஆகியோரை காப்பாற்றியதைப் போல, இவரையும் பாதுகாக்க பாஜக முயற்சிசெய்தது. ஆனால், முடியவில்லை.

இந்த விவகாரத்தில் சொந்த அரசுக்கு எதிராக போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு பாராட்டு குவிகிறது. இந்த “பாஜக” தலைவரை தூக்கிலிட வேண்டும்!
இவர் “பாஜக” இன் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். இன்னும் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை என்பது வெட்கக்கேடு.
ஒரு பள்ளி கழிப்பறையில் 4 வது வகுப்பு படிக்கும் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தார். மருத்துவ பரிசோதனைகள் கற்பழிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக