புதன், 8 ஏப்ரல், 2020

தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு 8 ஆக உயர்வு!


நக்கீரன் : கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இருந்த போதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா பாதிப்பு மாகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தீவிரமாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை இன்று தமிழகத்தில் 621ல் இருந்து 690 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 64 வயது பெண் இன்று உயிரிழந்தார். அதன் காரணமாக, கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று 7 ஆக உயர்ந்திருந்தது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக