ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கொரோனா உயிரிழப்பு 59 000-ஐ தாண்டியது .. உலகளவில் உயிரிழந்தோர் ..


மாலைமலர் : உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலியில் 14,681 பேர்
உயிரிழந்துள்ளனர். ஜெனிவா:< சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 434 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 59 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 923 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 8 லட்சத்து 10 ஆயிரத்து 351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 39 ஆயிரத்து 391 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது

உலக அளவில் இத்தாலியில் அதிக அளவாக 14,681 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. அங்கு 11,198 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கையிலும் இத்தாலியை நெருங்கி உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் இதுவரை 119,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஸ்பெயினில் 119,199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக