புதன், 1 ஏப்ரல், 2020

டெல்லியில் இருந்து வந்த 50 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது

News18 Tam : 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.
அந்த டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாங்களாக முன்வரவேண்டும்’என்று பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ‘தமிழகத்தில் ஏற்கெனவே 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று, புதிதாக கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதின் ஜமாத் மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
டெல்லி மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாங்களாக முன்வரவேண்டும்’என்று தெரிவித்தார்.
>டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) தற்போது பேசுபொருளாகியுள்ளது. மார்ச் மாதம் இந்த ஜமாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 9 இந்தியர்களும், ஒரு வெளிநாட்டவரும் மரணமடைந்துள்ளனர். மார்ச்  13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்த ஜமாத் மதக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. 1,700 முதல் 1,800 இந்தியர்களும், தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 200 முதல் 250 வெளிநாட்டவர்களும் இதில் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் மூலம் கொரோனா பரவியது தற்போது தெரியவந்துள்ளது. ஜமாத்தைச் சேர்ந்த சுமார் 85 மத போதகர்கள் டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று டெல்லியில் உறுதி செய்யப்பட்ட 25 புதிய கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 18 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். இதனால் ஜமாத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி வேகமடைந்துள்ளது.


ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் அனைவரையும் டிராக் செய்துவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களில் 10 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். தமிழகத்துக்கு அங்கிருந்து வந்தவர்களுள், 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாங்களாக முன்வரவேண்டும்’என்று பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். இதில் ஜாதி மத பாகுபாடுகள் எதுவுமில்லை. தாங்களாகவே முன்வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக