வியாழன், 23 ஏப்ரல், 2020

13 வயது சிறுமியை இருவர் பலாத்காரம் நால்வர் வீடியோ எடுத்தனர் .. சீதாப்பூர் ..உபி U P: 13-year-old girl gang-raped, filmed in Sitapur

Hemavandhana - tamil.oneindia.com : லக்னோ: 13 வயது சிறுமியை 2 பேர் சீரழிக்க.. அதை 4 பேர் வீடியோ எடுத்துள்ளனர்... விடுமா போலீஸ்.. சம்பந்தப்பட்ட 6 பேரில் 5 பேரை கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளது... இந்த அக்கிரம சம்பவம் உபியில் நடந்துள்ளது. வன்முறை தாண்டவமாடும் மாநிலங்களில் முதன்மையாக திகழ்ந்து வருவது உத்திர பிரதேசம்தான்.. நாளுக்கு நாள் கொலைகளும், பாலியல் அக்கிரமங்களும் ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. ஏராளமான பெண்கள் பலாத்காரம் செய்வது என்பது போய், அவர்களை கொளுத்தி தீ வைப்பது என்ற பயங்கரமும் அங்கு நடந்து வருகிறது. தற்போது ஊரடங்கு என்பதாலும், கொரோனா என்பதாலும் இதெல்லாம் இல்லாமல் இருக்கும் என்று நினைத்தால், மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை, 13 வயது சிறுமி வயலில் வேலைக்கு சென்றுள்ளார்.. மதியம் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது 6 பேர் கொண்ட கும்பல் சிறுமியை சுற்றி வளைத்துள்ளனர்.

வயல்வெளி என்பதால் ஜனநடமாட்டமும் குறைவு.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை நாசம் செய்துள்ளனர்.. 2 பேர் பெண்ணை சீரழிக்க, அதை உடனிருந்த மற்றவர்கள் நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
உடம்பெல்லாம் காயங்களுடன் வீட்டிற்கு சென்ற சிறுமி, தன் அம்மாவிடம் நடந்ததை அழுதவாறே சொல்லி உள்ளார்.. இதை கேட்டு பதறி போன தாயார், போலீசில் புகார் தந்தார்.. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. ஒருவர் தலைமறைவாகி உள்ளார்.. கைதானவர்களிடம் இருந்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் குறித்து சீதாபூர் மாவட்ட எஸ்பி எல்.ஆர்.குமார் சொல்லும்போது, 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், அதை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.. இதையடுத்து அவர்களை கைது செய்துள்ளோம்.. தலைமறைவாகி உள்ள மற்றொருவரை தேடி வருகிறோம். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம்.. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.. இந்த வழக்கு சம்பந்தமாக தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக