வியாழன், 2 ஏப்ரல், 2020

நேற்று மட்டும் அமெரிக்காவில் 1000, ஸ்பெயினில் 920, இத்தாலியில் 720 உயிரிழப்புக்கள் ... முதல் 10 நாடுகள் !

இத்தாலி 3வது இடம்   /tamil.oneindia.com :  ஜெனிவா: 203 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 937,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 47, 266 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 4890 பேர் இறந்துள்ளனர்.
உலகிலேயே மிக அதிகபட்சமாக நேற்று அமெரிக்காவில் 1049 பேர் இறந்தனர். நேற்று அதிபட்ச உயிரிழப்பை சந்தித்த டாப் 10 நாடுகளை இப்போது பார்ப்போம்.
கொரோனாவின் மைப்புள்ளியாக மாறி உள்ளது அமெரிக்கா. அங்குதான் உலகிலேயே மிக அதிகபட்சமாக 215003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் 26473 பேருக்கு வைரஸ் பாதித்தது. 1049 பேர் ஒரே நாளில் இறந்தததால் உயிரிழப்பு எண்ணிக்கை 5102 ஆக உயர்ந்துள்ளது.


இத்தாலி 3வது இடம்

ஸ்பெயினில் 8196 பேருக்கு புதிதாக நேற்று கொரோனா பரவிய நிலையில் ஒட்டுமொத்தமா அங்கு 104118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஸ்பெயினில் ஒரே நாளில் 923 பேர் புதிதாக உயிரிழந்த நிலையில், அங்கு ஒட்டுமொத்தமாக 9387 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது கொஞ்சம் உயிரிழப்பு குறைந்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 723 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13155 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு 2352 ஆக உயர்வு

உயிரிழப்பு 2352 ஆக உயர்வு

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 4782 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 110574 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் ஏப்ரல் 1ம் தேதியான நேற்று ஒரேநாளில் 4324 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட்டதால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29474 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 563 பேர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 2352 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 509 பேர் பலி

புதிதாக 509 பேர் பலி

பிரான்ஸில் நேற்று ஒரேநாளில் 509 பேர் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக பிரான்சில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 4032 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் நேற்று புதிதாக 4861 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56989 ஆக உயர்ந்துள்ளது.

சிறப்பான சிகிச்சை

சிறப்பான சிகிச்சை

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகளிலேயே உயிரிழப்பு என்பது ஜெர்மனியில் தான் குறைவாக உள்ளது. இதற்கு அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் காரணமாக இருக்கலாம் என்றுகூறப்படுகிறது. ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 156 பேர் இறந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஜெர்மனியல் 931 பேர் இறந்துள்ளனர். ஆனால் ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 6173 பேருக்கு பரவிய நிலையில் ஒட்டுமொத்தமாக 77981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


துருக்கி 10வது இடம்

துருக்கி 10வது இடம்

ஈரானில் நேற்று ஒரே நாளில் 138 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3036 ஆக உயர்ந்துள்ளது. 2988 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதால் ஈரானில் கொரோனா பாதிப்பு 47593 ஆக உயர்ந்துள்ளது. 8வது இடத்தில் அயர்லாந்து உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 134 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக 1173 பேர் இறந்துள்னர். 9வது இடத்தில் பெல்ஜியம் உள்ளது. அங்கு நேற்று 123 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 828 ஆக அதிகரித்துள்ளது. துருக்கி 10வது இடத்தில் உள்ளது. அங்கு நேற்று 63 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 277 பேர் இறந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக