ஞாயிறு, 1 மார்ச், 2020

ஸ்டாலின் எனும் பரிணாம வளர்ச்சி .. அசாத்தியமானது !. We stand we fight we ...no retreat no surrender

Devi Somasundaram : ஸ்டாலின் எனும் பரிணாம வளர்ச்சி .
கிராமத்துல இருந்த வரை பேப்பர்ல அரசியல்வாதியா தான் இவரை அறிந்திருந்தேன்..சென்னை வந்து ஓவர் ப்ரிட்ஜ் , மெட்ரோ, ஐடி கம்பெனிகள் , அகன்ற சாலைகள் , மக்கள் கூட்டம் பெருக பெருக அதன் தேவைகான வசதிகள் தொடர்ந்து கிடைக்க வைத்ததில் ஸ்டாலின் பங்கு அறிய வந்த போது அவரது நிர்வாக திறன் மீதான பிரமிப்பு அதிகமானது ..
பாம்பே போன்ற வர்த்தக தலை நகர் குப்பை காடா காட்சி யளிக்கும் போது சென்னை போன்ற சாதாரண பெரும் நகரின் வளர்ச்சி அசாத்தியம்...
அதற்கான உழைப்பு தன் வசதி குறித்து மட்டும் யோசிக்க தெரிந்த சுய நலவாதிகளுக்கு புரியாமல் போகலாம்..மற்றவர்க்கு கண்டிப்பா புரியும் .
அது ஒரு அசகாய பணி, அதன் பின் நிறைய திட்ட மிடல் இருக்கு. மக்கள் நலன் சார் சிந்தனை இருக்கு, இந்த நாட்டு வளர்ச்சி குறித்த அக்கறை இருக்கு..
இவை ஸ்டாலினோட செயல்பாடுன்னு புரிந்த போது அவர் மேல எழுந்த மதிப்பு . அது கலைஞர் மகன் என்ற உணர்வு கடந்த மக்கள் தலைவர் மீதானது .
திமுக, மீதான வெறுப்பை தள்ளி வைத்து யோசிக்க முடிந்தால் நான் சொல்வதை உண்மைன்னு எதிரியும் ஒத்து கொள்வர்கள்

கலைஞர் உடல் நலம் குறைந்து கட்சி ஸ்டாலின் கட்டுபாட்டுக்கு வந்த போது மூத்த தலைமைகளிடம் காட்டிய மரியாதை, கட்சி நிர்வாகிகளிடம் காட்டிய கண்டிப்பு, தன் தலைமை குறித்த பொறுப்புணர்வோடு செயல்பட்ட விதம் அவர் நல்ல தலைவர்ன்னும் அடுத்த கட்டம் நோக்கி வளர்ந்ததை காட்டியது

நல்ல நிர்வாகியா,நல்ல கட்சி தலைவரா மட்டும் இல்லாம நல்ல மக்கள் தலைவரா இருப்பாரான்னு ஒரு டவுட் இருந்துட்டே இருந்துச்சு ..
மாற்று கட்சிய எங்க விமர்சிக்கனுமோ அங்க விமர்சித்து, எங்க அமைதி காக்கனுமோ அங்க , மத மடமைகளை எங்க விமர்சிக்கனுமோ அங்க விமர்சித்து .எங்க அமைதி காக்கனுமோ அங்க அமைதி காத்து ..( கம்யூனிஸ்ட்கள் நமக்கு விமர்சனம் இருந்தாலும் கம்யூனிஸம் இந்த நாட்டுக்கு தேவையான கொள்கை என்பதில் பெரியார் , அண்ணா, கலைஞரிடம் இருந்த அதே தெளிவு ) .
தலைவன் என்பவன் மக்களின் தவறுகளுக்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டிய அழுத்ததில் கை கொள்ள வேண்டிய நிதானம் ஸ்டாலின் கிட்ட வந்திருப்பதை அவர் வார்த்தைகளில் இருக்கும் குற்றம் சாட்டாமல் இருக்கும் தன்மை உணர்த்தும்.
ராஜ ராஜ சோழன் என்ற மாமன்னன் நிருவி வைத்து விட்டு போன பேரரசன் என்ற பெயர் ராஜேந்திர சோழனுக்கு பெரும் சுமை .எது செய்தாலும் ராஜ ராஜனுடன் ஒப்பிட்டு விமர்சிக்க படும் உள் எதிரியையும் சமாளித்தாகனும் .
எதிர் கட்சியான பி ஜே பியே கலைஞர் திட்டங்களை காப்பி யடித்து தான் நல்ல பேர் வாங்க வேண்டி இருக்கு என்றால் ஸ்டாலின் மட்டும் கலைஞரோட செயல்பாட்டோடு ஒப்பிட படாமல் ஜோதி பாசு கூடவா ஒப்பிட முடியும் ..
ஸ்டாலினுக்கு திறன் சார் ஒப்பிட்டு எதிரியா அவர் அப்பாவே இருந்துவிட்ட நிலை வரமா சாபமா என்பதை ஸ்டாலினா இருந்து தான் அறிய முடியும்..
அரசியல் ராஜ தந்திரியின் மகனாய் இருப்பதில் உள்ள சுமையும் சேர்ந்து சமாளிப்பதில் ஸ்டாலின் வளர்ச்சி அசாத்தியமானது .
நாளைய தமிழகத்தின் நம்பிக்கை தரும் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக