செவ்வாய், 17 மார்ச், 2020

Rakhi Birla : இந்த 'தடிபார்' - குண்டன், ரௌடி ( அமித் ஷா) 12 மாதங்கள் குஜராத்தில் இருந்தால் சாட்சிகளை கலைத்து விடுவான்


Sivakumar Nagarajan : ராக்கி பிர்லா - ( Rakhi Birla.)  பேசிய பேச்சு, டெல்லி முதல்வர் பேச்சைவிட அருமையாகப் பேசினார்.
அவர் பேச ஆரம்பித்த உடன், டெல்லி சட்டமன்றத்தில் இருந்த 8 பாஜக உறுப்பினர்களும் கத்திக் கூச்சல் எழுப்பினர்.
அந்தக் கூச்சல்களுக்கு இடையே, தான் சொல்லவந்ததை தெளிவாகக் கூறினார் ராகி. அவர் பேசியது: "இந்த நாட்டில் இப்போது குடும்ப அட்டை - ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்ற எதற்கும் மதிப்பில்லை.
ஒரு 'தடிபார்' (குஜராத்தி மொழியில் குண்டன், ரௌடி).."
என்று சொன்னவுடன் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கத்த ஆரம்பித்தனர். ஏனெனில், அமித்ஷாவின் பட்டப்பெயர் 'தடிபார்'.
"ஆன் தி ரெகார்ட் (ஒரு பதிவில்) உள்ளது" என பதிலுக்குச் சொன்னார் ராகி. (குஜராத் உயர்நீதிமன்றத்தில் அமித்ஷாவுக்கு எதிராக நடைபெற்ற ஒரு வழக்கில், நீதிபதி எழுதிய தீர்ப்பில் எழுதிய வாசகங்கள்: "இந்த 'தடிபார்' - குண்டன், ரௌடி இன்றிலிருந்து 12 மாதங்கள் வரை குஜராத்திற்குள் இருக்கக்கூடாது. இந்த தடிபார் குஜராத்துக்குள் இருந்தால், இந்த வழக்கின் சாட்சிகளை மிரட்டிக் கலைத்துவிடுவான்". இதையேதான் ராகி தன் பேச்சில் ஆன் தி ரெகார்ட் எனக் குறிப்பிட்டார்).
"ஒரு தடிபார் தேர்தலில் போட்டியிட்டு, இந்த நாட்டின் உள்துறை அமைச்சராக முடியும்.

இதற்கு பாஜகவினர் கத்தியதற்கு 'தடிபார் கௌன் ஹே?' என 5முறை கேட்டார் ராகி. அதற்கு ஆம்ஆத்மி கட்சி உறுப்பினர்கள் அமித்ஷா என ஒருசேரக் கத்தினர்.
ஒரு 'சாய் பேச்னே வாலா' - 'டீ விற்பவன்' இந்த நாட்டின் பிரதமராக முடியும். (இதற்கும் கத்தல்கள்).
அதற்கும் விடாமல் 5முறை சாய் பேச்னேவாலா எனக் கூறினார்.
இவர்களெல்லாம் தேர்தலில் நின்று வெற்றிபெற உதவிய வாக்காளர் அடையாள அட்டைக்கும் இப்போது மரியாதையில்லை.
இப்போது கொண்டுவரப்பட்ட சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக சாலையில் பொதுமக்கள் போராடுகின்றனர். பெண்கள் போராடுகின்றனர். மாணவ, மாணவிகள் போராடுகின்றனர். பிற்பட்ட வகுப்பினர் போராடுகின்றனர். தலித்கள் போராடுகின்றனர். வழக்கறிஞர்கள் போராடுகின்றனர். மருத்துவர்கள் போராடுகின்றனர். பொறிஞர்கள் போராடுகின்றனர்.
எல்லோரும் தன் தாய், தந்தையின் பிறப்புச் சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும் எனச் சொல்கின்றனர். இந்த நாட்டின் பிரதமரால் (நரேந்திரா) அதைக் கொடுக்கமுடியாது. இந்த நாட்டின் உள்துறை அமைச்சரால் (அமித்ஷா) அதைக் கொடுக்கமுடியாது. இந்த நாட்டின் நிதியமைச்சரால் (நிர்மலா) அதைக் கொடுக்கமுடியாது. இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரால் (ராஜ்நாத் சிங்) அதைக் கொடுக்கமுடியாது. எல்.கே. அத்வானி அவர்களால் அதைக் கொடுக்கமுடியாது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாக்வத் என்பவராலும் அதைக் கொடுக்கமுடியாது.
அதைக் கொடுக்க முடியாத இவர்களைக் கொண்டுபோய் டெடன்ஷன் கேம்ப்பில் (தடுப்புமுகாமில்) அடைக்க முடியுமா? அவர்களை அடைக்க முடியாதென்றால், இந்த நாட்டின் ஏழைகள், கூலி வேலை செய்பவர்களை மட்டும் அடைக்க வேண்டுமா?" எனப் பேசினார்...
From fb friends

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக