திங்கள், 9 மார்ச், 2020

"இனமானம் " என்றால் கசக்கிறது சிலருக்கு .. என்னதான் காரணமோ?

Sugan Paris 2 hrs · இன மா நம் இ ந மா னம் இந இந நம நம மா நம் நம் தந் த நம் நம் தந்த நம் நம் தந் த நம் நம் தந்தனம் தம்

 Radha Manohar இந்த பதிவில் தாங்கள் கூறுவது என்ன? இனமான பேராசிரியர் அன்பழகன்  அவர்களை சிறுமை படுத்துவதா? பதில் கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..
Sugan Paris :  தமிழக அரசியலுக்கு சீமானும் எச். ராஜாவுமே அதிகம் என்கிறேன் நான் .நீங்களாச்சு உங்க மானமாச்சு மனோ !

 Rubasangary Veerasingam Gnanasangary வாயால வடை சுடுவதைவிட சாதித்துக் காட்டுவதுதான் உண்மையான வெற்றி. மக்களை திசைத்திருப்புவதைத் தவிர சீமானும் எச். ராஜாவும் என்ன புடுங்க முடியும்? அவர்கள் இருவருமே ஒரேதளத்தில் நின்று இயங்குபவர்கள். பெரியார் எதிர்ப்பு மட்டுமே. பெரியாரின் கருத்துக்களை இன்னொரு படிமேல் கொண்டுசெல்லக் கூடிவர்கள் இன்றைக்கு எவருமே இல்லை. தமிழ் நாடு பேசும் இனமானம் பார்ப்பனியத்துக்கு எதிரானது மாத்திரமே.

 Radha Manohar :  இதுதான் அச்சு பிசகாத அசல் யாழ்மையவாதம் என்பது .. நாங்கள் மட்டுமே புத்திஜீவி அறிவாளி ..தமழ்நாட்டுக்காரன் என்றால் ஏதோ தங்களை விட தரம் குறைந்த மனித பிறவி என்ற தற்குறி மனோபாவம் .. ஆழமாக எதுவும் தங்களுக்கு தெரியாது என்பதை மிக தெளிவாக் உரைத்துள்ளீர்கள் . தமிழ்நாட்டை பற்றி இவ்வளவு தரம் தாழ்ந்த அபிப்பிராயம் இருக்கும் தங்களை போன்றவர்கள் இனி தமிழ்நாடு சினிமாவோ பாடல்களோ ரசிக்கவே கூடாது ..மேலும் தாங்கள் தமிழ் நாட்டு அரசியல் பற்றியும் கூறி உள்ளீர்கள் ..நிச்சயமாக உங்கள் அரசியலை விட அது ஆயிரம் மடங்கு சிறந்தது ..

 Giritharan Navaratnam : இனமானம் என்பது ""ப்ளடி பாசிஸ்ட் திங்க்கிங்'கா?
பாசிசம் என்றால் என்ன? ஒரு தனி மனிதனின் தலைமையில் கட்டுப்பாட்டில் நாடு, ஆட்சி, கட்சி போன்றவை அமையும் நிலையினை அவ்வாறு கூறலாம். இச்சொல் இத்தாலிய சர்வாதிகாரியான முசோலியின் அமைப்பினைச் சுட்டிக்காட்டும் வகையில் பூலோக அரசியலுலகில் அறிமுகமான சொல்.


இனமானம் என்னும் சொல் பாசிசச் சிந்தனையை பிரதிபலிக்கும் சொல்லா? மானம் என்பதற்குப் பல அர்த்தங்கள். அவற்றில் முக்கியமானது சுய கெளரவம். தன் மதிப்பு,. சுய மதிப்பு. சுய மரியாதை. மானத்தை உயிரினும் மேலாக மதிக்கும் போக்கு மானுடர்களில் உண்டு. தமிழர்களிலும் உண்டு. தமிழ்க்கவிஞர்கள் பலர் இதனை வலியுறுத்திப் பாடியுள்ளார்கள். "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்" , "இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு" என்று பாடியுள்ளார் வள்ளுவர். அவர் 'மானம்' என்றோர் அதிகாரமே ஒதுக்கியுள்ளார்.

"திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
மான முடையார் மனம்." என்று கூறுகிறது நாலடியார். அவமதிப்பு ஏற்படுகையில் மானம் உடையார் மனத்தில் காட்டுத்தீ போல் அனல் மிகுமாம்.

உண்மையில் மானம் என்னும் சிந்தனை பாசிஸ்ட் சிந்தனையா? ஓரினத்தால், கட்சியால், அமைப்பால், மதத்தால், தலைமையால் ஏனைய கருத்துள்ளவர்கள், மதத்தவர்கள், மொழியினர், இனத்தவர், கட்சியினர் கொடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குதலை பாசிச ஆட்சி என்போம். அவ்விதமான ஆட்சியினை வலியுறுத்தும் சிந்தனையை பாசிசச் சிந்தனை என்போம். சுயமதிப்பு மிக்க, சுய கெளரவம் மிக்க, சுய மானம் மிக்க யாரும், எவரும் அவ்வகையான சிந்தனைப்போக்குக்கு எதிராகவே செயற்படுவர். இனமானமும் அவ்விதமான சுய கெளரவம் தான். ஆனால் இனப்பெருமையை ஏனையவர்களை அடக்கி ஒடுக்க, ஏனைய இனங்களை அடக்கி ஒடுக்கப் பாவிக்கப்படும்போது, ஹிட்லர் செய்ததைப்போல் பாவிக்கப்படும்போது அது பாசிசச் சிந்தனையாகின்றது. இனமானம் பாசிசச் சிந்தனையல்ல. ஒவ்வொருவருக்கும், ஓவ்வோரினத்துக்கும் இருக்க வேண்டிய சுய கெளரவம், சுய மதிப்பு அது. ஆனால் ஆனால் இனப்பெருமையின் அதியுச்ச வடிவம் அடக்குமுறையின் வடிவமாக உருவெடுக்கையில் அது பாசிசம் உருவாகக் காரணமாக அமையும் காரணங்களிலொன்றாகின்றது.

இனமானம், சுயகெளரவம், இனகெளரவம் , சுயமதிப்பு, இனமதிப்பு அவசியமானதொன்று. முக்கியமானதொன்று..

Giritharan Navaratnam சுகன், பேராசிரியர் அன்பழகன் 'தமிழர் திருமணமும் ,இனமானமும்' என்றொரு ஆய்வு நூல் எழுதினார்.அதுதான் அவர் அவ்விதம் 'இனமானப் பேராசிரியர்' என்று அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று. அந்தப்புத்தகத்தின் அட்டை, உள்ளடக்கம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கின்றேன். மேலும் ஒரு காலத்தில் நாம் எல்லோரும் மனிதன் என்னும் பதத்தை எழுத்தில் பயன்படுத்தி வந்துள்ளோம். ஆனால் இன்று அது ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு என்பதால் அவ்விதம் எழுதுவதைத் தவிர்க்கின்றோம். பாரதியார் கூட தனி ஒரு மனிதனுக்கு என்று பாடியிருக்கின்றார் என்பதால் அவர் ஓர் ஆணாதிக்கவாதி என்றால் என்னால் ஒருபோதுமே ஏற்க முடியாது. பெண்ணுரிமையைப் பாடிய ,மக்கள் விடுதலையைப் பாடிய கவிஞன். அன்பழகன் அவர்களின் நூல் வெளியான காலகட்டத்தைப் பார்க்க வேண்டும். அன்று தமிழகத்தில் பெரியார், அண்ணா ஆகியோர் சுயமரியாதைச் சிந்தனையை, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சிந்தனையை, வடக்கின் ஆதிக்கத்துக்கு எதிரான திராவிடர்களின் உரிமையினை வலியுறுத்த எழுத்து, திரைப்படம் என்று கலை, இலக்கியங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் எழுச்சியினை, விழிப்பினை ஊட்டிக்கொண்டிருந்த காலகட்டம். அக்காலகட்டச்சூழலில் வைத்து அவர் அவ்விதம் அழைக்கப்பட்டதைப் புரிந்து கொள்ள வேண்டும். 'பராசக்தி' வி.சி.கணேசன் என்று ஒரு காலத்தில் அழைத்ததைப்போல் , அன்பழகன் அவர்களின் சீர்திருத்தக் கருத்துகளை உள்ளடக்கிய 'தமிழர் திருமணமும் இனமானமும்' நூல் காரணமாக,அது அடைந்த வரவேற்பு காரணமாக அவ்விதம் அழைக்கப்பட்டதாகவே நான் புரிந்துகொள்கின்றேன். பாரதி ஒரு காலத்தில் தேசிய விடுதலையின் தேவை முக்கியமாக இருந்த காலத்தில் இந்திய தேசியத்தை, இந்தியர்களின் இனப்பெருமையை வலியுறுத்திப் பாடினான்.அது அக்காலகட்டத்தில் தேவையாகவிருந்தது. இந்தியர்களை அடிமை நிலையிலிருந்து எழுச்சி கொள்ள வைப்பதற்கு. இலங்கையில் கூட மார்க்சியத்தமிழ் அமைப்புகள் ஒரு கட்டத்தில் இலங்கையின் பெரும்பான்மையின மார்க்சியர்கள் தமிழர்களின் போராட்டத்தின் உண்மைத்தன்மையினைக் கண்டு ஆதரவளிக்காத நிலையில் தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம் முதலில் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கினார்கள். நீங்களும் அவ்விதம் செயற்பட்ட அமைப்பொன்றில் இயங்கினீர்கள். ஓர் இனத்தின் மானம் என்னும் சொல் அவ்வினம் பல வழிகளிலும் சீர்குலைந்து, அடக்கப்பட்டு, அடிமைப்பட்டுக்கிடக்கும் நிலையில் அவ்வினத்தைத் தட்டியெழுப்பப் பாவிக்கப்படுவதில் தவறில்லை. பெண்ணினம் தன் உரிமைகளுக்காகப் போராடுவதை ஒருவர் அவர்கள் தம் பெண்மானம் காக்கப்போராடுகின்றார்கள் என்றழைத்தால் அதனையும் இவ்விதமே பாசிஸ்ட் சிந்தனையென்று அழைப்பீர்களா?

Jeyaruban Mike Philip தவறான புரிதல். கிரிதரன் மிகச்சிறந்த மனிதாபிமானி..

Sugan Paris : கிரியண்ணை சிறந்த மனிதாபிமானியும் சமூக உணர்வுள்ள புத்திஜீவியும் என்பதில் எனக்கு கேள்வியில்லை மைக். ஆனால் அவர் இனமானம் எனும் பாசிஸ்ட் சிந்தனைமூலத்தை கேள்விக்கு உள்ளாக்கவேண்டும் என கேட்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக