செவ்வாய், 10 மார்ச், 2020

பண்ணையார் வாசனும்.. மகராஜா ஸிந்தியாவும் .. ஆண்ட பரம்பராஸ்

Devi Somasundaram : ஜோதிராவ் ஸிந்தியாவும் ..ஜீ கே.
வாஸனும்.
மத்திய பிரதேச குவாலியர் மகாராஜ வம்சத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் காரர், கேபினட் அமைச்சரா இருந்தவர் ..இவர் அப்பா மாதவராவ் ஸிந்தியா ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததால் அவர் வாரிசா அரசியலுக்கு வந்தவர் .
தன் முதல் தேர்தலிலேயே குணா கான்ஸ்டியன்ஸில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தி பி ஜே பியின் தேஷ் ராஜ் சிங் யாதவை வென்றவர் .
முன்னேறிய உயர் வகுப்பை சேர்ந்தவர் .இன்றும் மிக செல்வாக்கான நபர் .இந்தியாவின் பணக்கார பார்லிமெண்டேரியன் .
இப்ப ஏன் இது? .
நேற்று ஸிந்தியா பி ஜே பி ல சேர்ந்து விட்டார் ...
இவரை மாதிரியே அப்பாவால வாரிசா தலைமைக்கு வந்தவர் தான் வாசன் ..இவரும் பணக்கார பண்ணையார் வம்சம் தான்...
அவரும் பி ஜே பி ல சேருகிறார் .
ஆனா ஸிந்தியா இன்னும் செல்வாக்கான ஆதிக்கம் நிறைந்தவர் ... காரணம் வடக்க இன்னும் ராஜ குடும்ப அரசியல் அப்படியே தான் இருக்கு ..
ராஜஸ்தான், மகராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் மன்னர் ஆட்சி ஒழிந்தாலும் மன்னர் குடும்ப அதிகாரம் ஒழிய வில்லை ...
அவர்கள் கைகாட்டும் ஆள் தான் ஜெயிப்பார் .
ஆனா தமிழ் நாட்ல பண்ணையார் ஆதிக்கம் ஒழிந்து விட்டது .. வாசன கும்பகோணம் இந்த பக்கம் , தஞ்சைக்கு அந்த பக்கம் ஒருவருக்கும் தெரியாது..அவர் தேர்தல்ல நின்னு மண்ணை கவ்வினார் .

இது தான் திராவிட ஆட்சிகளின் சாதனை ... வடக்கு இன்னமும் ஸிந்தியாகளின் பிடியில் ..தமிழ் நாடு மக்கள் ஓட்டுப் போட்டு யாரை தேர்ந்தெடுக்கின்றனரோ அவரே ஆட்சியில் ..
பி ஜே பி யில் சேரும் இரண்டு மன்னர் வாரிசுகளிடையே இது தான் வேறுபாடு ..
எப்படியோ காங்கிரஸ் ல் இருந்து பண்ணையார்கள் பி ஜே பிக்கு நகர்வது பாராட்டலாம்....காங்கிரஸுக்கு பண்ணையார் கட்சி என்ற பேர் ஒழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக